இன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் ஆகும். காரணம் காற்றலையோடு நானும் இரண்டரக் கலந்து இன்றோடு ஆண்டொன்று பூர்த்தியாகின்றது. இந்த வருடமொன்று எப்படி உருண்டோடியது என்று தெரியவில்லை. அவ்வளவு வேகமாக சென்றுவிட்டது. திரும்பி வந்த பாதையை மீட்டுப் பார்த்தால் இதில் இன்பமும், துன்பமும் நிறைந்த பல சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.
நினைத்துப் பார்க்கும் போது அது இன்று காலை பூத்த தாமரைப்பூப் போன்று மனதிற்கு புதிய உற்சாகத்தை தருகின்றது. அந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த வருடம் 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி என் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை புரட்டி வைத்த நாள் என்று சொல்லலாம். நான் அக்னி fm க்கு அறிவிப்பாளர் கற்கை நெறியை கற்கச் சென்று சில வாரங்களுக்குள்ளேயே ஆசிரியர்/நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி என் குரலையும் காற்றலையில் கலந்திட அனுமதித்தார். முதன்முறையாக ஜுன் 27ம் திகதி மாலை 4 மணிக்கு "Akkni.com" நிகழ்ச்சியினூடாக காற்றலையில் கலந்தேன்.
அப்போது என்னுடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுஹைல் அண்ணாவையும், இன்று எனது வெற்றிப் பயணத்திற்கு வித்திட்டவரான ஆசிரியர் சரவணபவன் அண்ணாவையும் இவ்விடத்தில் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன். அன்று ஆரம்பித்த எனது ஊடகத்துறை வாழ்க்கை பல விருதுகளையும் வாங்க வைத்தது.

Akkni fm இன் "அக்னி விருது வழங்கும் விழா 2009" இல் வளர்ந்து வரும் சிறந்த 8 அறிவிப்பாளர்களில் நானும் ஒருவனாக தெரிவுசெய்யப்பட்டு, சூரியன் fm இன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாவின் கையால் பதக்கம் அணிவிக்கப்பட்டேன்.
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்ற போது அளவில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.
அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாக 8 மணிநேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். சிறந்த பாடல்களைத் தெரிவு செய்து நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புவதில் அனேகரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாது இறுதியாக Akkni fm இன் 1வது பிறந்த தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட "Best DJ Of The Month" விருதை தட்டிக்கொண்டதும் மிக்க மகிழ்ச்சி.
அப்படியே தொடர்ந்த என் வாழ்க்கையில் சில மனவிரக்தி தன்மையும் ஏற்பட்டது. காரணம் முன்னணி ஊடகங்களுக்குள் செல்ல வாய்ப்புக்கள் தேடினேன். இருந்தும் அவை கைநழுவிப் போனது. எனினும் ஊடகத்துறை வாழ்க்கையை விட்டு வெளியேறவில்லை. எனது அன்பான நண்பர்களின் அரவணைப்பினாலும், உற்சாகத்தினாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். அந்தக் கனவும் நிறைவேறியது.
இன்று ஸ்ரீ தொலைக்காட்சியில் கடமை புரிந்து கொண்டிருக்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
Video Editor ஆக, News Reporter ஆக, News Presenter ஆக பல துறைகளிலும் கால் பதித்துள்ளேன் என்பது இந்த ஒரு வருட காலத்தில் நான் செய்த சிறு சாதனைகளாகும். இன்னும் பலவற்றைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது……!
சந்திப்போம் உறவுகளே மற்றுமொரு பதிவினூடாக…….!
வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.