கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினாலும் அதன் பின் உருவான ஆழிப்பேரலை காரணமாக இதுவரையில் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது... அத்துடன் 100 பேருடன் சென்ற கப்பல் பற்றி தகவல் ஏதும் இல்லை.. 3 புகையிரதங்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்...
அத்துடன் புவி அச்சில் இருந்து ஜப்பான், 25 சென்றிமீட்டர்கள் வரை நகர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாது பூமி தற்போது ஒரு நாளில் 1.6 மைக்ரோ செக்கன்கள் வேகமாக சுழலுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இப்பூகம்பமானது உலகிலேயே பதியப்பட்ட 4 வது மிகப்பாரிய புவியதிர்வு ஆகும்.. இதற்கிடையில் அணு உலைகளும் ஒவ்வொன்றாக வெடிக்கத்தொடங்கியுள்ளது...
நேற்றைய தினம் 3 வதாக ஹைதரசன் உலை வெடித்துச்சிதறியது...
இந்தச்சத்தம் சுமார் 160 கிலோமீட்டருக்கும் அப்பால் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்..
இதேவேளை அமெரிக்க விஞ்ஞானிகள் உலங்கு வானூர்தியில் இருந்து கதிர்வீச்சின் வீரியத்தை பரிசோதித்துள்ளனர்.. அதன் துகள்கள் மிகவும் ஆபத்தானதாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்..
இவை மனித உடலின் உறுப்புக்களையும்,உடலில் உள்ள திசுக்களையும், சுரப்பிகளையும் பாதிப்படையச் செய்யுமென்றும் தெரிவித்துள்ளனர்.. இந்த கதிர்வீச்சானது 160 கிலோமீட்டருக்கும் அப்பாலும் பரவி வருவதாலும்,மக்களை வெளியே வர வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் 4 வயதுக்குழந்தையும், முதியவர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.. நாளுக்கு நாள் ஜப்பானின் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கின்றது..
பாதிப்படைந்த ஜப்பானின் புகைப்படங்களும் காணொளிகளும் வருமாறு...













