வியாழன், 3 டிசம்பர், 2009

என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள்....

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் .வேலைப்பளு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்கள் அனைவரையும் புதிய பதிவோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..........

ஒவ்வொருவரினதும் வாழ்வில் மனதில் மறக்கமுடியாத சம்பவங்களாக,மனதை விட்டு நீங்காதவையாக சில சம்பவங்கள் தடம்பதித்து இருக்கும்.
அச்சம்பவங்கள் சிலர் வாழ்வில் மகிழ்ச்சியை தருவதாயும்,சிலரின் வாழ்வில் கறுப்பாய் படிந்த கறைகற்களாயும் காணப்படும்.
அந்தவகையில் நான் இன்றய தினம் என் வாழ்வில் நடந்த மறக்கமுடியாத சந்தோஷமான சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

1வது சம்பவம்..
அண்மையில் நடந்த அக்னி FMன் விருது வழங்கும் விழாவில் சிறந்த 8 அறிவிப்பாளர்களில் நானும் ஒருவனாக தெரிவு செய்யப்பட்டதும்,சூரியனின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியான நவா அண்ணா பதக்கம் அணிவித்ததையும் என்வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்களில் ஒன்றாகும்.

2வது சம்பவம்..
எல்லோருக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.ஆனால் அந்த நண்பர்கள் நல்லவர்களாயிருந்தால் தான் அவன் வாழ்க்கை நல்லதாக அமையும்.இல்லையேல் அவன் வாழ்க்கை மட்டுமல்லாது அவன் சார்ந்த அனைவரினதும் வாழ்க்கையும் திசைமாறிப் போகும். அந்தவகையில் எனக்கு கிடைத்த நண்பர்கள் மூன்று முத்தான முத்துக்கள் எனலாம். கோபி,புவிராஜ்,திவாகர் ஆகியோராவர். என் வாழ்வில் வந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள்,இருக்கின்றார்கள்,இருப்பார்கள். நான் துவன்டு போன சமயங்களில் மனம் தளரவிடாமல் என்னை முன்னோக்கி நகர்த்தியவர்கள்.பழகியது சிறியது காலம் என்றாலும் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போலாகிவிட்டோம்.என்றுமே என் நண்பர்களை மறக்கவே முடியாது.
(பெயர் குறிப்பிடாத ஏனைய நண்பர்களையும் நான் இவ்விடத்தில் நினைவு கூறுகின்றேன்.)



3வது சம்பவம்..
நட்புறவை வளர்க்க உதவும்(FACE BOOK)மூஞ்சிப்புத்தகத்தின் மூலம் எனக்கு கிடைத்த மூன்று புதிய சொந்தங்கள்...
1-விஜி அக்கா (எனக்கு நல்ல சகோதரியாகவும்,உயிர் நண்பியாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறார். சாப்பிட மறந்தாலும் இவரோடு பேச மறப்பதில்லை.)
2-பதுமிளா அக்கா (மூஞ்சிப்புத்தகத்தில் கிடைத்த முதல் நண்பியும் ஆவார்.சாப்பிட மறந்தாலும் இவர் எனக்கு sms அனுப்ப மறக்கமாட்டார்.reply பன்னாவிட்டால் அடுத்த நாள் ரொக்கெட் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டிவரும் sms வழியாக.)
3-சுஹைல் அண்ணா (முதன்முதலில் என்னோடு தொலைபேசி வாயிலாக இணைந்து கொண்டவர் இவர்தான்.பார்த்தால் அமைதியின் உருவமாய் காட்சி தருவார்.)

4வது சம்பவம்..
முதன்முதலில் நான் காற்றலை வழியாக பவணி வந்த நாள். அறிவிப்புதுறைக்கு வரவேண்டும் என்ற கனவுகளோடு அக்னி குடும்பத்தில் அறிவிப்பாளர் பாடநெறியை பயிலச்சென்று, மூன்றாம் வாரமே வானலையில் என்னை பேசுவதற்கு அனுமதியளித்த அக்னி fmன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியும்,ஆசிரியருமான சரவணபவன் அண்ணாவையும்,அத்தோடு முதல் நிகழ்ச்சியை என்னோடு தொகுத்தளித்த(குரு) வானொலிக்குயில் விருதினை தட்டிச்சென்ற அகமட் சுஹைல் அண்ணாவையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது.

5வது சம்பவம்..
எல்லோருக்கும் மனஅமைதியை தரும் இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தை என்னாலும் மறக்க முடியாது. காரணம் எனது அப்பாவின் பிறப்பிடமும் மலைநாடு தான்.நுவரெலியாவிற்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது புசெல்லாவ. அந்த ஊரையும் அங்கு உள்ள இயற்கை அழகு நிறைந்த இடங்களையும் சொந்தபந்தங்களையும் என்றுமே மறக்கமுடியாது.

6வது சம்பவம்..
நான் முதன்முதலாக பணம் சேர்த்து வங்கியில் வைப்பிலிட்டு வாங்கிய கையடக்க தொலைபேசி. நான் ஆசைப்பட்ட தொலைபேசி வேறொன்றாக இருந்தாலும் பணம் பற்றாக்குறையினால் இப்போது வைத்திருக்கின்ற தொலைபேசியை வாங்கினேன்(மகிழ்ச்சியுடன்). அதுமட்டுமா? வீட்டில் அப்பாவிடம் நிறைய திட்டும் வாங்கினேன்,வாங்கிக்கொண்டிருக்கிறேன். 1 வருடம் கடந்த நிலையிலும் கூட....

சரி என்னடா வழமையாக 5 அல்லது 10 விஷயங்களை எழுதுவார்கள்.நான் ஏன் 6 விஷயத்துடன் நிறுத்திவிட்டேன் என்று யோசிக்கின்றீர்களா? எனக்கு பிடித்த எண் 6. அதனாலேயே என் வாழ்வில்(இதுவரையில்) மறக்கமுடியாத மிகச்சிறந்த 6 சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். தொடர்ந்து நான் எழுதுவதற்கு தயாராக இருக்கின்றேன். உங்கள் ஆதரவையும் வேண்டிநிற்கின்றேன்.
வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

//பழகியது சிறியது காலம் என்றாலும் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போலாகிவிட்டோம்.//

அடேய்.... ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளா?
படுபாவி.... எத்தினை சம்பவங்களுக்கு நீ இன்னும் party தர வேண்டி இருக்குது தெரியுமா?


//என்றுமே என் நண்பர்களை மறக்கவே முடியாது.//
அப்பிடி இருந்தா சரி தான்...


//சாப்பிட மறந்தாலும் இவரோடு பேச மறப்பதில்லை.//
தெரியுமப்பு... தெரியும்...


//reply பன்னாவிட்டால் அடுத்த நாள் ரொக்கெட் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டிவரும் sms வழியாக//

அப்ப நாங்களும் றொக்கற் தாக்குதல் நடத்தினாத் தான் பதிலனுப்புவியளோ?


ம்....
தொடர்ந்து எழுது நண்பா....

அப்படியே அறிவிப்புத் துறையில் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்....
தொடர்ந்து எழுதுங்கள்.....

வாழ்த்துக்கள்....

Unknown சொன்னது…

கனககோபி சொன்னது…
//அடேய்.... ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளா?
படுபாவி.... எத்தினை சம்பவங்களுக்கு நீ இன்னும் party தர வேண்டி இருக்குது தெரியுமா?//

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் தானே அப்புறம் எதுக்கு பார்டி? நான் சாப்பிட்டா நீங்களும் சாப்பிட்டது போல் தானே... ஹி ஹி ஹி.......
நன்றி உங்களின் கருத்துரைகளுக்கு.

Unknown சொன்னது…

//ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் தானே அப்புறம் எதுக்கு பார்டி? நான் சாப்பிட்டா நீங்களும் சாப்பிட்டது போல் தானே... ஹி ஹி ஹி.......
நன்றி உங்களின் கருத்துரைகளுக்கு//

தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு எண்டு பழமொழி இருக்குத் தம்பி.....

Unknown சொன்னது…

கனககோபி சொன்னது…
//தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு எண்டு பழமொழி இருக்குத் தம்பி.....//

உண்மைதான்... அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். சரி நான் தருவதற்கு முன் நீங்கள் தரவேண்டிய லெமன் பொப்ப் பார்டியை தருவீர்களா?

கருத்துரையிடுக