அனைவருக்கும் வணக்கங்கள். சிறிய இடைவெளிக்கு பின்னர் உங்கள் அனைவரையும் புதிய பதிவொன்றில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி....

கந்தசாமி திரைப்படம் வந்தவுடன் அந்த படம் மீது இருந்த எதிர்பார்ப்பினாலும் விக்ரமின் சிறந்த நடிப்பையும் பார்ப்பதற்காக நானும் எனது தம்பியும் மற்றும் எனது நண்பர்களும் சேர்ந்து திரைப்படம் பார்க்க அண்மையில் உள்ள திரையரங்கிற்கு சென்றோம்.
அதை பார்த்துஅனைவருமே நொந்தசாமி ஆனது வேறு கதை. சரி விஷயத்திற்கு வருவோம்.
என்ன நடந்தது என்றால் வழமை போலவே நான் 8 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு வீடு வந்து சேரும் போது 8.40 மணியாகிவிட்டது.
வீட்டில் அம்மா,அப்பா,தம்பி அனைவருமே தொ(ல்)லைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் விதி விலக்கா என்ன?
தேனீர் கோப்பையுடன் தொ(ல்)லைக்காட்சிக்கு முன்னால் வந்து அமர்ந்தேன். குடிக்க ஆரம்பித்தது மட்டும் தான் திடீரென்று என் தலைக்கு மேலாக
ஒரு சிறகு ஒன்று பறந்து கொண்டு என்னை நோக்கி வந்தது. உடனே நான் அந்த சிறகை வாயால் ஊதினேன்.மேலே பறந்து விட்டு அது மீண்டும் என்னை நோக்கி வந்தது. இந்த இரவில் எங்கேயிருந்து வந்தது என்று நான் யோசிக்க,
எனது தம்பி ஒரு வார்த்தை கூறினான் "அண்ணா கந்தசாமி வந்துட்டார் போல" என்றான்.(அவன் யார் சிங்கத்தின் தம்பியாச்சே!)
ஒரு நிமிடம் நான் எனது மனசாட்சியிடம் கேட்டேன் "எங்கேயாவது நான் தப்பு பண்ணிட்டேனா?" என்று. உடனேயே அது கூறியது "டேய் நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன்டா" என்றது.
அப்பாடி என்று ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டு மேலே பார்க்கும் போது அது வீட்டு கூரையின் இடைவெளி வழியே வெளியே நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பாடா..... என்று மீண்டுமொரு பெரு மூச்சை விட்டேன்.
சும்மா இருப்பானா என் தம்பி அதுக்கும் ஒன்று சொன்னான். அண்ணா "கந்தசாமி வீடு மாறி வந்திட்டார் போல" என்றான். அப்புறம் என்ன தொடர்ந்தேன் தொ(ல்)லைக்காட்சியுடன் தேனீர் பருகலை (கந்தசாமி உண்மையா? என்ற மாபெரும் ஆராய்ச்சியுடன்). வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். விரைவில் சந்திக்கின்றேன் புதிய பதிவுடன்...

7 கருத்துகள்:
அடடா.... தலைப்பைப் பாத்து ஏமாந்திட்டனே.....
//நான் 8 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்து //
என்ன நிகழ்ச்சி?
நீங்கள் இரவு தண்ணியடிக்கப் போறத எல்லாம் நிகழ்ச்சி எண்டு சொல்றது அவ்வளவு நல்லா இல்லத் தம்பி...
கனககோபி சொன்னது…
//அடடா.... தலைப்பைப் பாத்து ஏமாந்திட்டனே.....//
என்ன செய்ய கோபி உங்களுக்கு வாழ்கையில் எத்தனை ஏமாற்றங்கள் இல்லையா? மன்னிக்கவும்.
//என்ன செய்ய கோபி உங்களுக்கு வாழ்கையில் எத்தனை ஏமாற்றங்கள் இல்லையா? மன்னிக்கவும்.//
ஆகா.... எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறாங்கடா.....
கனககோபி சொன்னது…
//என்ன நிகழ்ச்சி?
நீங்கள் இரவு தண்ணியடிக்கப் போறத எல்லாம் நிகழ்ச்சி எண்டு சொல்றது அவ்வளவு நல்லா இல்லத் தம்பி...//
கோபி அண்ணே நீக செய்றதெல்லாம் ஏன் எங்களுக்கு சொல்லறீங்க...
இதுக்கு தான் அளவோடு அடிக்கவேணும் என்று சொல்லறது யார் அடித்ததுன்னு தெரியாமல் போச்சு பாத்தீங்களோ?
ஹீ.. ஹீ..ஹீ..
தலைப்புல கவர்ச்சியகாட்டி கூப்பிட்டு இப்டி கட்டாந்தரையகாட்டுரியலே... சரி பதிவுபாக்க வந்ததுல ரெண்டுபேரும் அமோகமா தண்ணியடிக்குற பயபுள்ளைகள் எண்டு தெரிஞ்சுது.
கந்தசாமி தேவலை!! இப்டி நம்மளை ஏமாத்தளைப்பா
கருத்துரையிடுக