செவ்வாய், 26 ஏப்ரல், 2011

எங்கேயும் காதல் பாடல்கள்...!!

எங்கேயும் காதல்...!! இந்தப்படத்தை பற்றி எல்லோரும் அதிகம் பேசி விட்டார்கள். ஆகவே நான் அதைப்பற்றி பேசாமல் பாடல்களின் காணொளிகள் (promo) வெளி வந்திருக்கின்றது.. பார்ப்பதுக்கு அழகாகவும் அருமையாகவும்மிருக்கின்றது....! அப்பாடல்களின் வெளிவந்த சிறு பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...!!

1.நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ பாடல்.....

2.தீ இல்லை... புகை இல்லை பாடல்.....

3.நங்கை.. நிலாவின் தங்கை பாடல்...

4.நங்கை..., லோலிட்டா...,நெஞ்சில் நெஞ்சில்..., எங்கேயும் காதல்... மூன்று பாடல்களும்...

பாடல்கள் சூப்பராக இருக்கின்றது.. ஹரிஷ் ஜெயராஜின் இசை கேட்கும் படி அமைந்துள்ளது...! காதல் படம் வேறு.. அதுவும் பிரபு தேவா இயக்கியுள்ளார்.. காதலைப்பற்றி அவரிடம் கேட்கவும் வேண்டுமா..?? அதுதான் நயன், ஹன்சிக்கானு கலக்குறாரே.. படமும் கலக்கல்தான் இருக்கும் என்பது எனது நம்பிக்கை..!!

இப்படியும் ஒரு மழைபாட்டு.....!!

வழமை போலவே இன்று காலையும் வேலைக்கு செல்ல ஆயத்தமானேன்.. இடி, மின்னலோடு மழையும் பெய்து கொண்டிருந்தது.. அதனால் கொஞ்சம் தாமதித்தே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டியிருந்தது. வீட்டுப்பக்கம் உள்ள வீதிகள் எல்லாம் மிகத்தரமானவை என்பது தெரிந்ததால் எதுக்கும் முச்சக்கர வண்டியில் செல்வதே மேல் என்று தோணியது. அருகில் நின்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏறி பஸ் தரிப்பிடம் செல்லும் படி ஓட்டுனரிடம் கூறி ஏறிக்கொண்டேன்.. அவரும் என்னைபோலவே கொஞ்சம் அட்வான்ஸ் ஆக யோசிப்பவர் போல, தம்பி உங்களை நான் ஸ்டான்ட்டிலேயே விட்டு விடுறேன் அப்போ உங்களுக்கு இருந்து செல்ல முடியும் என்று 141 ஆம் இலக்க பஸ் பயணத்தை ஆரம்பிக்கும் இடமான மனிங் பிளேசில் இறக்கிவிட்டார். சரியென்று நானும் அடுத்து செல்ல இருந்த பஸ்ஸில் ஏறினேன்.. ஏறி இருந்து கொண்டு பஸ்ஸில் சத்தமாக சென்று கொண்டிருந்த சகோதர மொழி பாட்டை கேட்டேன்... இன்றைய மழையுடன் கூடிய கால நிலைக்கு பொருத்தமான அருமையான பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலும் "ஓ..... வஸ்ஸ வைனவா.... ஓ..... வஸ்ஸ வைனவா...." ரொம்பவும் பிடித்து விட்டது.. அழகாக மழை பெய்யும் 0போது இடம்பெறும் விடயங்களை எடுத்துக்காட்டியது அப்பாடல்...! வாய்க்கால்களில் தாராளமாக நிரம்பி வழிவதும், இடி, மின்னல் பற்றியும், சுழல் காற்றினால் மரங்களும் சுழலுகின்றது,சிறிதாக உள்ள தாவரங்களும் பறக்கின்றது. இன்னும் வருண பகவான் கண்ணீர் வடிக்கின்றார் என்று அழகான வரிகளுடன் அமைந்த பாடல்...! கொஞ்சம் பழைய பாடல் என்று நினைக்கின்றேன்...தர்மரட்ன சகோதரர்கள் இணைந்து பாடியது. நீங்களும் அப்பாடலை கேட்டு,பார்த்துத்தான் பாருங்களேன்..!!


கேட்டுப்பார்க்க......,

சரி மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்போம்....!!!!

வியாழன், 21 ஏப்ரல், 2011

இப்படியும் வருமா...??

கடலில் பொதுவாக பேரலைகள் எழுவது பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம், தொலைகாட்சி, மற்றும் புகைப்படங்கள் மூலமாக கண்ணுற்று இருப்போம்... ஆனாலும் அந்த பேரலைகள் எப்படி எல்லாம் எழும் என்று தெரியாது... அதுவும் இப்படி வர்ணங்களால் எழுமா..?, இல்லை என்றால் இப்படி வர்ணங்களால் எழுந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட பண்ணியிருக்க மாட்டோம்... அப்படியான ஒரு வர்ணமயமான கற்பனை உலகிற்கு உங்களை அழைத்து செல்கிறேன்... வாருங்கள் தோழர்களே....!!

ம்ம்... அழகான வண்ணமயமான கடலலைகளை பார்த்து ரசித்தீர்களா..??? நிச்சயம் உங்கள் உங்கள் மனதினை இவ்வர்ண புகைப்படங்கள் கவர்ந்திருக்கும்...!! மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்பம் உறவுகளே...!!

புதன், 20 ஏப்ரல், 2011

யானைத் தலையுடன் விசித்திர மனிதன்....!!

உருவத்தில் யானையை போன்ற ஒத்து இருக்கும் மனிதன் பார்த் திருக்க மாட்டீர்கள். பூஜை அறையில் சுவாமி விநாயகரையும், படங்களில் விநாயகரை போன்று பொம்மைத் தலையுடன்தான் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க்கே உண்மையிலே யே ஒரு மனிதன் யானை தலையுடன் இருப்பதை நீங்கள் பாருங்கள். சீனாவைச்சேர்ந்த Huang Chuncai என்ற இந்நபர் தனது முகத்தில் 23 கிலோ சதையுடன் இதுவரை வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு அறுவைச்சிகிச்கை மூலம் குறிப்பிட்டளவு சதை அகற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 கிலோ வரை அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


நன்றி இணையம் ...!