திங்கள், 9 மே, 2011

"SLPL 11"இல் விளையாடும் அணிகளின் இலச்சினைகள்..!

"Sri Lankan Premier League 2011"

இது தான் 07 அணிகளின் இலச்சினைகள் ஆகும். இதில் 07 அணிகள் மோதவுள்ளன.. அரை இறுதி சுற்றுக்கு 04 அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. 18 நாட்களில் 24 போட்டிகள் இடம் பெறவுள்ளது. எல்லா போட்டிகளும் கொழும்பு பிரேமதாச மைதானத்திலே நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் போட்டிகளுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் Chris Gayle, Shahid Afridi, Daniel Vettori, Shoaib Akthar, Kieron Pollard, Daniel Christian, Herschelle Gibbs and Kevin O'Brien ஆகிய சர்வதேச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கந்துரட்ட, நகேனஹிர, ருஹுன, பஸ்னாஹிர, உத்துர, உவா மற்றும் வயம்ப ஆகிய மாகான அணிகளே மோதுகின்றது. ஒரு அணிக்கு 16 தொடக்கம் வரையான 18வீரர்கள் உள்ளடக்கம் செய்கின்றார்கள்.. இலங்கை வீரர்களும் சர்வதேச வீரர்களும் இடம்பெறவுள்ளனர். ஒரு அணியில் 07 இலங்கை வீரர்களும், 04 சர்வதேச வீரர்களும் இடம்பெறுகின்றனர். இந்திய வீரர்களும் சிலர் இதில் இடம் பெறவுள்ளனர். இப்போட்டிகள் ஜூலை மாத இறுதிப் பகுதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் நடுப் பகுதிவரை இடம்பெறவுள்ளது. இது பற்றி மேலதிக செய்திகள் வெளிவருகின்ற போது பகிர்ந்து கொள்கின்றேன்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக