சனி, 12 நவம்பர், 2016

"பம்பர பதம" வும் "பொய்யடி" பாடலும்..


வணக்கம் உறவுகளே..

நம்மவர்களின் கலை திறமை இன்று பல விதங்களில் வெளிப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அவற்றில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இன்று அண்மையில் வெளிவந்த இரண்டு காணொளிப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அந்த வகையிலே முதலாவதாக : பொய்யடி

அண்மையில் பவனின் தயாரிப்பில் "பொய்யடி" என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்று வெளியானது.

இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
காரணம் காதல் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக அல்லது ஒருதலைக் காதலை கூறும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளது. அத்துடன் பாடல் காட்சியமைப்பும் பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


ஹனி நாயகராவின் இசையில், கிஷோத் மற்றும் ஹனி ஆகியோரின் வரியில் இப்பாடல் அழகாக அமையப்பெற்றுள்ளது.
பாடல் காட்சியில் மனோஷாந்தன் மற்றும் ப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.


காதலித்த பெண் விட்டுப் பிரிந்து போவது ஏமாற்றும் நோக்கம் மட்டுமல்ல, எம் மீது இருக்கும் அக்கறையிலும் கூட இருக்கலாம் என்று ஒரு செய்தியை சொல்லும் விதமாக பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.








ஒட்டுமொத்த குழுவும் பாடலை திறம்பட கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்துள்ளனர் என்பது பாடலை பார்க்கும் அனைவருக்கும் காணக் கூடியதாக இருக்கும்.
அப்பாடலில் இறுதியில் சொல்லப்படும் செய்தியே பாடலின் பெரிய ஹைலைட் என்று சொன்னால் அது மிகையாகாது.



அப்பாடல் உங்களுக்காக...





Singer : Kishoth Chandru
Music : Honey Niagara
Lyrics : Kishoth & Honey
Mixing and Mastering : Honey Niagara
Cast : Manoshanthan, Priya Pragash
Direction and DOP : Bavananthan Nithiananthan
Editing : Chenduran Aravinthan
Violin : Athisaiyan Suresh
Flute : Sanjeevan Aravinthan
Screenplay : Glory Ana, Bavananthan, Manoshanthan, Vino Yaso
Art Direction : F R Anjelao
Assistant Direction : Vino Yaso, Glory Ana


அடுத்து அண்மையில் வெளிவந்த மற்றுமொரு சகோதர மொழி (சிங்கள) பாடல் "பம்பர பதம"


நீண்ட இடைவெளிக்கு பின் டிரோன் பெனாண்டோவின் இசையில், நம் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான நிரஞ்சனி ஷண்முகராஜாவின் புதிய அவதாரமாக பாடகியாக, அவரின் குரலில் சகோதரமொழிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


துரு துருவென இருக்கும் பெண்ணாக பாடல் காட்சியில் தோன்றி, பாடியும் இருக்கின்றார். டிரோனின் பாடல்கள் எப்போதும் புதிய முயற்ச்சியாக, புதியவர்களுக்கு களம் கொடுக்கும் விதமாக அமைவதுண்டு. அந்த வகையிலே தான் இப்பாடலும் அமைந்துள்ளது. பாடல் வரிகளை துமிந்தவும், ஒளிப்பதிவை துஷ்யந்தனும் சஞ்சீவனும் செய்துள்ளனர்.
இசைக்கலவை ராஜ்குமார்.
Music : Diron Fernando
Artist : Niranjani Shanmugaraja
Lyrics: Duminda Alahendra
Video: Varun Thushyanthan
Mixed n masterd by Raj Kumar (Raj K)
Shots: Seetharaman Sanjeevan
Production : Vassanthe Pradeep
Arunodayan Jenoosh Lawrence
Still: Lahiru Dilranga Silva





இந்தப் பாடல்கள் காணொளி வடிவில் புது முயற்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதுவும் இளைஞர்கள் தங்களால் சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்பதற்கு இவை சிறந்த சான்று.


வியாழன், 10 நவம்பர், 2016

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இலங்கை



இன்றைய தினம் 2017 ஆம் ஆண்டுக்கான, இலங்கையின் 70தாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர், ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டது.






இன்றைய வாசிப்பிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வருகை தந்திருந்தனர்.







பழைய வாகனங்களின் ஏற்றுமதிக்கு வரி நிவாரணம்

இலங்கையிலுள்ள 100 மிகப்பெரிய தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் கோரிக்​கை விடுக்கின்றேன். 

தன்னியக்க டெலர் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

இணையத்தள பரிமாற்றங்களுக்கு வரி அறவிடப்படும். 

பழைய வாகன ஏற்றுமதிக்கு வரிச்சலுகை.

100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.

இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.

பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும் 

கார்பனுக்கு புதிய வரி.

சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.

பெல்மடுல்லவில், அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும் 

425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.

உள்நாட்டு பால்மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாயால் குறைப்பு.

வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.

நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.

உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.

பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயால் குறைப்பு.

பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு.

வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும் 

நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது 

லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10,000 ரூபாய் 

சூரிய சக்தி திட்டங்களுக்கான கடனுக்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன 

ரியல் ஸ்டேட் மேலாண்மை தகவல் அமைப்பு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குள் உள்ளடக்கப்படும் 

சிறிய குளங்களுக்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

நஞ்சற்ற நாடு திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 1,750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

அரச சேவையாளர்கள் 14 இலட்சம் பேர் இருந்தாலும், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோருக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொதுச்சேவைகள் குறித்தான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் 

பொதுச் செயலாளர் பொதுப்பணித் துறையை ஆய்வு செய்தல் 

இளைஞர்களது திறமைகளை வளர்க்க, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

புதிதாக துறவியாகுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும். இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.

ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.

சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி 

சுகததாச விளையாட்டரங்கு புதுப்பிக்கப்படும். இதற்கு, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

இளைஞர் ​தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

பண்டித் அமரதேவ கலாசார நிலையத்துக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.

தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

சர்வதேச வெசாக் உற்சவத்துக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவ​டிக்கைக்கு ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாய் நிதியொதுக்க புகையிலைநிறுவனத்துக்கு யோசனை.

பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காக, 1.5 மில்லியன் ரூபாயை, வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காக, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ரயில்வே துறையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

வாழ்க்கைப்பூராகவும் நீடிப்பதற்கான அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம் 

ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டமானது, ​​வெடிக்கும் நிலையிலிருக்கும் குண்டாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபாய்.

இராணுவத்தினருக்கான கொடுப்பனவை வழங்க 3500 மில்லியன் ரூபாய்.

அரசாங்க வீட்டுத்திட்டங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழ்தோர் அவர்களது வீட்டின் உரிமத்தை மாற்றுவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

படையினரின் கொடுப்பனவுக்கு 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். அத்துடன், சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும்.

மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் 

வடக்கு கிழக்கின் வீடமைப்புக்களை வேகமான முன்னெடுப்பதற்கு 5000மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

15 வருடங்களுக்கும் மேலாக அரச வீடுகளில் வசித்துவருவோருக்கான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது, ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க, 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் வீடமைப்புத்துறை வங்கி ஆகியன ஒன்றிணைந்து 7 சதவீதக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முகவர் நிறுவனமொன்று அமைக்கப்படும். அதற்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் 

பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்கான 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்கான காணிகள், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.

மார்ச் 31ஆம் திகதியிலிருந்து புதிய உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

நிதி பரிமாற்ற நிறுவனங்கள் 200 ஆரம்பிக்க அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்.

பிரமிட் திட்டங்கள் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள், நிதி நிறுவனங்கள் வரை நீடிக்கப்படும் 

நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனமொன்று உருவாக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும் 

மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்.

திருகோணமலை நீர்த்திட்டத்தை அபிவிரு‌த்தி செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

2018ஆம் ஆண்டளவில், புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சேவைகள் சுய நிதியுதவியில் இயங்கும் 

நாடளாவிய ரீதியான குடிநீர்த்திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இலத்திரனியல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

முச்சக்கரவண்டி மற்றும் வான்களை கட்டுபடுத்த நிறுவனம்.

புகையிரதம் மற்றும் பஸ்களில் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான திட்டம் 

32 ஆசனங்களைக் கொண்ட பாடசாலை வான்களுக்காக 75 சதவீத வட்டி விலக்களிப்புக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

10 வருடங்களுக்கும் பழமையான ஹோட்டல்களுக்கு மீள் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கூட்டங்கள், மாநாடுகள், ஊக்குவிப்புகள், கண்காட்சி கைத்தொழிலுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிலாக 35 இருக்கைகளைக் கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும். 

முச்சக்கரவண்டிகளுக்கு பதிலான இலத்திரனியல் கார்கள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக 1000 வாகனங்களை இறக்குமதிச் செய்ய 50 சதவீதம் வட்டி குறைப்பு.

பதுளைக்கு நெடுஞ்சாலைகளை அமைப்பது சாத்தியமான என்பது குறித்து ஆராயப்படும் 

மத்திய மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.

உல்லாசப ்பயணிகளுக்கான இலத்திரனியல் விசா முறை அறிமுகப்படுத்தப்படும். 

சுற்றுலா வீடுதிகளில் குறைந்த அறைக் கட்டணம் இனங்கண்டு அறிவிக்கப்படும்.

நெனோ தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள கல்வி நிறுவகங்களில் அறிமுகப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு சுற்றுலா முக்கோண வலயம் அமைக்கப்படும். 

தெற்கு அதிவே நெடுஞ்சாலை பதுளை வரை விருத்திச் செய்யப்படும்.

நிர்மாணத் துறைக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வை நீக்கப்படும்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக 1,306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

இணையத்தள பயணத்துறையில் பொதுவான தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் 

பதுளையில் உள்நாட்டுக்கான விமானிநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் உண்டு 

மொபிடல் நிறுவனத்தை பொதுக் கம்பனியாக பட்டியற்படுத்தல்

ஸ்ரீ லங்கன் எயார்லைன் மற்றும் மிஹின் எயார் வர்த்தகரீதியாக்கப்படும் 

நனோ தொழிநுட்ப நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

துறைமுகத்தில் 12 மணித்தியாலங்கள் நங்கூரமிடுவதற்கு இலவசம்.

நாட்டில் வளர்ச்சி குன்றிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்ளுக்கு வரி விடுமுறை அறிக்கப்படும் 

கடல் மையங்கள் குறித்து முக்கிய நோக்கம் செலுத்தப்படுகின்றன. கடல் சார் அதிகாரங்கள் நிறுவப்படும் 

இலங்கையை, ஆசியாவின் ​கேந்திர மத்திய நிலையமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அரச வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கிக்கான தேவை ஏற்பட்டுள்ளது 

வர்த்தகத்துறைக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கொழும்பு வர்த்தகக் கண்காட்சியை அடுத்த வருடம் நடத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

ஏற்றுமதி கைத்தொழில் பேட்டைகள் 15 ஆரம்பிக்கப்படும்.

இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இலங்கையின் உற்பத்திகளுக்கும் தேவைகளுக்கும் பன்முகத்தன்மை தேவை 

பெருநகரங்களுக்காக நிதியமைச்சினால் 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு 

ஆடைத் தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

100 மில்லியன் மற்றும் 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும் 

தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி விடுவிப்பு.

சரியான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய பகுதிகளில், அமெரிக்க டொலர் 3 மில்லியனுக்கும் மேலதிக வர்ததகத்தை மேற்கொள்வதற்கு, 100 சதவீத முதலீட்டுக் கொடுப்பனவுகள். 

500 மில்லியன் ரூபாய்க்கு அதிக முதலீடு தொடர்பில் ஊக்குவிப்புத் திட்டம்.

வடக்கில் வர்த்தகங்களை முன்னெடுப்பதற்கு 200 சதவீதமான முதலீட்டு கொடுப்பனவுகள் 

செல்வத்தை உருவாக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

உப்பு உற்பத்தி நிறுவனங்கள் துன்பநிலையில் உள்ளன.ஆகையால், அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை.

சுகாதார அமைப்புக்களை பலப்படுத்தும் வகையில், அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளும் நோயாளிகளுக்கு செலவுத்தாள் ஒன்றை வழங்குதல் வேண்டும் 

பெறுமதி சேர்க்கப்பட்ட வியாபாரங்கள் ஊக்குவிக்கப்படும்.

செலவாணி கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு மாற்றீடு கொண்டுவரப்படும் 

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மத்திய ஓய்வூதிய நிதி சீரமைக்கப்படும் 

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

மனித வளத்தை வழங்கும் நிறுவனங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது 

சிறு வியாபாரிகளுக்கு சலுகைக் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும். இதற்காக 11 மணிவரைக்கும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது 

ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட செலவு தொடர்பிலான பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

500,000 ரூபாய் பெற்று அதனால் கடன் தகவல் பணிகயத்தில் பெயர் பதியப்பட்டதால், அவதிப்படுவோர்க்கு, அவர்களது வர்த்தகத்தை தொடர்ந்து செய்துக்கொண்டுச் செல்வற்கு அனுமதி 

அனைத்து ஒளடத நிலையங்களும், ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

வணிகங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

வியாபார நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத காணிகளை, வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்படாத மருந்து கடைகளை நடத்திச் செல்வோரை கைதுசெய்து 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தல்

கராப்பிட்டி, யாழ்ப்பாணம், அம்பாறை ஆதார வைத்தியசாலையில் குழந்தை மையங்களை அமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் 

தாதியர் பயிற்சிப் பாடசாலைகளுக்காக, 200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.

தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பாலர் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தவணை முறையிலும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். 

பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்படும் 

களனி பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்துக்கு, வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு இணையும் மாணவர்கள் 15 ஆயிரம் பேருக்கு, 8 இலட்சம் ‌ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல பெறுபேறுகளை பெறும் மாணவர்ளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் 

வௌிநாட்டு மாணவர்கள் 500 பேர், இலங்கையில் கல்வி கற்பதற்கு 500 விசாக்கள் வழங்கப்படும்.

கல்விச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மாணவர்ளுக்கான ஒன்றுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்படும 

பட்டப்படிப்புக்களை மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குபின்னர், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் இரவு 8 மணிவரை நீடிக்கப்படும்

பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இளைஞர் - யுவதிகளுக்கான உயர்க் கல்வியை வழங்கும் நடவடிக்கையை, அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அதற்கு, தனியார்த் துறையினரும் முன்வர வேண்டும்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் 10 மாடிக்கட்டடம் அமைக்கப்படும். 

பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக, 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

யாழ்ப்பாணம், ஜயவர்த்தனபுர, களனி, பேராதெனிய, ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடங்கள் தொடர்புடைய கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும் 

பல்கலைக்கழக மாணவர்களை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

சுகாதார காப்புறுதிக்காக 2,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

ஜயவர்தனபுர, களனி, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்களில், கல்விசார் பட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை

புள்ளிவிவரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக, 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பாடசாலையில் நல்ல ​பெறுபேறுகளை வெ ளிப்படுத்தும் மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில் திட்டங்கள். இவர்களுக்கு மாதந்ததம் 2,000 ரூபாய் வழங்கப்படும் 

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான மாணவர் இணைப்பு, 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்தினால் அதிகரிக்கப்படும்.

சுகாதார வசதிகளுக்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

2020இல், பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கப்படும்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்த போதிலும், முதலீடுகள் தேவையான பிரிவுகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும் 

5 வயது முதல் 19 வயது வரையான 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் காப்புறுதி வழங்க நடவடிக்கை

சிறுவர்களுக்கான 200,000 காப்புறுதிகளும் சேமிப்புக்கணக்கும் 

கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

விசேட கல்வியை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிப்பு

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக 175 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

2017ஆம் ஆண்டில் 100 பாடசாலைகளில் நீர் , மின்சார வசதிகளுக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதரம் ஆகியவற்றுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

பாடசாலைகளுக்கான அ​டிப்படை தேவைகளை வழங்கும் பொருட்டு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கல்வித்துறையை மேம்படுத்துவற்காக, 17840 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் 

பாடசாலை மாணவர்களுக்கு இலவச டெப்கள் வழங்கப்படும். Wifi அமைத்துக்கொடுக்கப்படும் . இதற்கு 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கல்விக்கு 90,000 மில்லியன் ‌ரூபாய் நிதி ஒதுக்கீடு

கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.

02:58 PM - 50 வேலாண்மை ஆய்வு நிலையங்களை அமைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம் 

20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.

100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய் 

கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் ​சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.

ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.

ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு 

கரையோர மீன்பிடி வலய அபிவிருத்திக்கு 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இறப்பர் உற்பத்திக்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 

தேசிய ரீதியில் பாற்பண்ணை வலங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழக கல்விமுறைமை விரிவுபடுத்தப்படும் 

திரவப் பாலுக்கான உயர் ரக கரவைப் பசுக்கள் 15 ஆயிரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இறப்பர் ஆராய்ச்சிக்கு நிறுவகத்துக்கு 50 மில்லியன் ‌‌ரூபாய் ஒதுக்கீடு.

எத்தனால் இறக்குமதிக்கு 5சதவீத வரி அறவிடப்படும். உள்ளூர் சீனி உற்பத்திகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் 

சீனி இறக்குமதிக்கான இறக்குமதித் தீர்வை, 2 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

கரும்பு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் காணிகள் வழங்கப்படும் 

தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, 75 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு

விவசாய கூட்டுறவுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும் 

இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, 900 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.




முதல் நாள் வரவு - செலவுத் திட்டத்தை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.
நாளைய தினம் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதன், 2 நவம்பர், 2016

அவளும் நானும்



புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம்.



பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?



வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான்.




நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.




பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.




இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.

இருக்கும் போது அருமை தெரியாது. இல்லாதப்போ தான் அவர்களின் அருமை தெரியும்.

#படித்ததில்பிடித்தது

புதன், 26 அக்டோபர், 2016

கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : வீதியில் டயர்கள் எரிப்பு


கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.

இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.



பின்னர் கலகம் அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காணொளி : வீரகேசரி இணையம் 


மினி சினிமா


வணக்கம் உறவுகளே..!
மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மினி சினிமா பகுதியூடாக குறுந்திரைப்படமொன்றின் விமர்சனத்தையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
இந்த வாரம் உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் குறுந்திரைப்படம் முள்ளந்தண்டுகள்.






கடல் கடந்து ஐரோப்பிய நாட்டில் வசித்து வரும் எம் ஈழத்து இளைஞர்கள் குழாமின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் ஆரம்பிக்கும் போதே "பிள்ளைகளின் குளிர் காய்தலுக்காய் விறகுகளாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்"
என்று ஆரம்பிக்கின்றது.

கடல் கடந்து சென்று, தம் நாளாந்த வாழ்க்கையை நடத்துவத்துக்கும், தமது சொந்த பந்தங்களின் வாழ்க்கையை ஒளியேற்றவும், வெயில், மழை, குளிர் என்று பொருட்படுத்தாமல் உயிரையும் துச்சமாக நினைத்து குடும்பம் சகிதம் அங்கு சென்று பணி புரிவோர் எத்தனையோ..

தாய், தந்தை, பிள்ளைகள் என அனைவரும் பகுதி நேரம் அல்லது முழு நேரம் என உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞனும் அவனது நண்பர்களும் தங்களின் வாழ்க்கையும், குடும்பத்தின் நிலையையும் மறந்து, உடலையும் உதிரத்தையும் உருக்கி, உழைக்கும் பணத்தினை ஊதாரித்தனம் பண்ணி, வாழ்க்கையை தொலைக்கும் சம்பவமே இக்கதையாகும்.


தாய் அன்பு காட்டவும், தந்தை கண்டிக்கவும் செய்யாவிட்டால், பிள்ளைகளின் நிலை இப்படித்தான் என்பதற்கு இக்குறுந்திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
அளவுக்கு மீறி தந்தை கொடுக்கும் செல்லமே, பின்நாளில் தந்தையை மிரட்டி பணம் பறிக்கவும் வைக்கின்றது. அதை கண்டிக்க முடியாத தந்தை, மறுக்க முடியாமல் பணத்தை கொடுக்கின்றார் ஏன் எதற்கு என்று கேட்கமுடியாமல்.. அதுவே அவன் விதியையும் மாற்றி எழுதப்போகின்றது என்பதை அறியாமல்.!

தவறான நண்பர்களுடன் நட்பை வைத்துக்கொள்ளும் இளைஞன், போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றான். காசுக்காக அப்பாவிடம் பணம் பறிக்கும் இளைஞன, பின்னர் வீட்டில் பணத்தை களவெடுத்துச் செல்கின்றான். போதைக்கு அடிமையான அவன், போதைக்கு முந்தியடிக்க முற்பட்டு, அது கைகலப்பில் நிறைவடைகிறது. அதோடு நிற்கவில்லை அது உயிரையும் குடிக்கின்றது .

நாட்டின் வருங்கால முதுகெலும்புகளாகிய இளைஞர்கள், முள்ளந்தண்டற்றவர்களாக வீணாய்ப் போவதை பற்றி 13 நிமிடங்களுக்குள் இயக்குனர் சொல்ல முனைந்திருக்கின்றார். அருமையான முயற்சி.







அருமையான பின்னணி இசையும் பாடகியின் குரலும் படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு. கோவிசன்க்கு ஒரு சபாஷ் போடலாம்.

கதை, திரைக்கதை, இயக்கம் : அஜந்தன்
ஒளிப்பதிவு : கோவி சன் 

ஒளிப்பதிவு உதவி : சுதன்
                                     பிரியன்
                                     தாஸ்
எடிட்டிங் : ஷங்கர் 

இசை : ஈஸ்வர் 
இசைக்கலவை : பாபு 
பாடகி : திபோஷனா
நடிகர்கள் : கிருஷ்
                      கவுதம்
                      ரமேஷ்
                      செல்வகுமார்
                      கணேஷ்
                      கீதம் மற்றும் பலர்..
தயாரிப்பு : நட்சத்திரம் பதிப்பகம்

மீண்டும் அடுத்த வாரம் மினி சினிமா பகுதியூடாக மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்..!! வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...!!

திங்கள், 24 அக்டோபர், 2016

Female ex-employee reveals the rampant abuse by frustrated officials at Cricket's head office - ஆங்கிலப் பதிவு


இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் பாலியல் ரிதீயாக துன்புத்தல்களுக்கு ஆளானாரா..??
மனம் திறக்கின்றார்.
இது ஓர் ஆங்கிலப் பதிவு..


Sexual demands, groping, touching, lude comments and verbal abuse of helpless and silent female employees are common occurrences inside the glamourous offices of Sri Lanka Cricket (SLC) according to the official testimony of a former female Executive officer of the country’s most internationally recognized corporate body.

In a startling revelation made during a formal disciplinary hearing, SLC’s former Confidential Secretary in the Marketing Division, Gayathri Wickramasinghe has exposed the dirty underbelly of the creature that in Sri Lankagoverns what is supposedly the “gentlemen’s game”.

“During the tenure of my service with SLC, I have faced harassments including sexual harassment and perversion by, certain personnel of SLC. I have been offered with club memberships in order to call for evening drinks and certain individuals have related about their extra marital affairs during the official working hours with me” revealed Wickramasinghe in her statement at a recent inquiry against her.






“Even I have faced sexual harassment physically. In fact, I reported one incident in 2012, to then CEO Mr. Ajith Jayasekara and he has taken the matter up with the then President Mr, Upali Dharmadasa who sorted out the issue,” she added.

“The individuals I have mentioned here are certain employees of SLC and certain Ex-co members of the SLC. I do not want to divulge the names of them but I would do when the necessity arises. Being an unmarried lady, I did not want to complain and tarnish my image, myself due to the reason of manipulation and finally publishing all bogus stories against the innocent parties,” she said.

“However bogus stories about me have been published in tabloids and newspapers. Later on “Ceylon Today” dated 17th September 2014 published an apology. I was the only female involved in organizing tournaments. During the time I was working with tour organizing I have faced sexual harassments and perversion from certain support staff individuals as well” said Wickramasinghe.

She went on to drop a bombshell when she claimed that the termination of her employment at SLC was mainly due to her refusal to co-operate with the sexual demands of some perverted officials.
“Having stated all these harassments during the past, I feel the allegations which are stated in my charge sheet are meaningless, baseless, lack of coherence and (levelled) to take revenge from me for not obeying them” she stated.

Subsequently, websites published stories about Wickramasinghe’s allegations, though without solid proof and she felt it obviously was the work of frustrated SLC officials hell-bent on destroying her for not acceding to their perverse sexual demands. It bore all the hallmarks of their usual modus operandi.

Then on September 7, SLC’s COO Jerome Jayaratne quoted these web stories and a newspaper article and asked her for a “detailed report” of the alleged harassment she faced as they were “serious allegations”.

However, she did not respond as she had more than enough reason to lose confidence of SLC and its officialdom and felt it was another attempt to ridicule her more through web-site mudslinging.


Wickramasinghe, though many may not know her by name, rose to prominence in Sri Lanka as much as SLC’s international cricketers in recent years largely thanks to the no-holds barred, un-governed and un-monitored world of cyber journalism which today is a free-for-all and seen by many as a monster beyond control.

Stories made up, according to Wickramasinghe, by frustrated SLC officials often spread like wild fire on gossip media though they had no shred of evidence and sometimes forced SLC to conduct investigations, only to find they held no water.

A weird story of spending a night with a cricketer during a Test match was one such story. A shocking allegation of altering a receipt for a false claim was another example. There are several such examples that made her famous or infamous in the cricket circles.

Wickramasinghe by nature is outgoing, confident and straightforward. She is talented and was good at her job, exactly the things despised by uneducated and incompetent officials and their henchmen who roamed the offices of SLC. So they resorted to alleged sexual harassment and spreading gossip to get the better of her. Finally, they got rid of her but through flimsy charges, most of which were rejected by her immediate supervisor.

Interestingly, among the charges for her sacking are none to say that she was incompetent. Among the charges levelled by SLC are brushing her hair, applying make-up and painting her nails in the office, talking too loudly on the phone and getting late to come to office though she had covered those hours by staying well behind the closing hours to cover the work assigned to her.

In fact, Wickramasinghe had worked for an extra 39 hours and two minutes more than her stipulated working hours during the period SLC had investigated according to information transpired at the inquiry. Her superior officer confirmed at the inquiry that she had come to office late as she was assigned to collect cheques from SLC sponsors on her way to office.

So frustrated by the sudden sacking even without a letter of warning, Wickramasinghe was forced to come up with the harassment she had silently endured at the hand of some officials. She said she feared reprisals from officials if she revealed them at the time she was working but felt the suffering was meaningless, when she heard of the ridiculous charges trumped-up to get rid of her.

She told “Daily Mirror” that current SLC officials suspected her of links with their rival parties and have gone to extremes to find a reason to get rid of her.

In his evidence, Wickramasinghe’s superior Vajira Dassanayake, the then head of Marketing at SLC gave a clear picture on how things developed. Recalling a SLC meeting on May 30, Dassanayake said “He (SLC President) told the staff present that he is aware of information leaking out due to the conduct of some staff members. He further told that he would take appropriate action to remove such obstacles and he is aware of the proper legal mechanism to achieve such an action”.

Wickramasinghe, describing the said meeting in her statement stated; “The President SLC accused the personnel who were present there for leaking confidential information to the media. He further stated that he had further identified the people through his sources who support the opposed parties to SLC. Also the President stated in a threatening tone that he will be taking action against the employees from tomorrow as he has identified them as obstacles for his future plans. He further stated that he very well knew the law and he knows how to tackle the situation”.

Recalling what happened the following day Dassanayake added: “CEO called me to his office and reluctantly handed over a letter of suspension for a period of three months. After half an hour I got to know that the accused officer (Wickramasinghe) has also been given a similar suspension order.”

(By Channaka de Silva)

நன்றி : Dailymirror இணையம் 


பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.!



யாழ். பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.







காலை 10 மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது.






அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்துவிட்டனா். அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் இங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது. மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது பல்கலைகழக மாணவா்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.






பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.


ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சகல பல்கலைக்கழகங்களிலும் நீதிகோரி நாளை முதல் போராட்டம்

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் மர­ணத்­திற்கு நீதி கோரி நாளை முதல் சகல பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தாக அனைத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது.  
கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்­டாளர் லகிரு வீர­சே­கர மேற்­கண்ட வாறு தெரிவித்தார்.  



அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,  
யாழ்ப்­பாணம் நக­ருக்கு அண்­மித்த குளப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி மாண­வர்கள் இருவர் மர­ண­ம­டைந்­துள்­ளனர். ஆரம்­பத்தில் இந்த சம்­பவம் விபத்து என அறி­விக்­கப்­பட்ட போதும் பின்னர் மரண பரி­சோ­த­னை­களின் பிர­காரம் துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.  
அதன் அடிப்­ப­டையில் பொலிஸார் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்கள் பணி­நீக்­கமும் செய்­யப்­ப­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  எவ்­வா­றா­யினும் மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்­துள்ள இச்­சம்­ப­வத்தை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.  
2012ஆம் ஆண்டு கண்­டி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி நடத்­தப்­பட்ட பேர­ணியின் போது களனி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் இதே­போன்று தான் விபத்தில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட போதும் அது விபத்து அல்ல திட்­ட­மிட்டு செய்­யப்­பட்ட கொலை என்று தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  
இதை­யொத்த சம்­ப­வ­மா­கவே யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது இடம்­பெற்ற துப்­பாக்கி பிர­யோக சம்­ப­வத்­தையும் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. பொலிஸார் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள நிலையில் பொலிஸ் கட்­ட­மைப்பை நிரு­வ­கிக்கும் அர­சாங்­கமே அதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் ஏற்று பதில் கூற­வேண்­டி­யுள்­ளது.   
அத­ன­டிப்­ப­டையில் உயி­ரி­ழந்த குறித்த இரு மாண­வர்­க­ளுக்­காக நீதி கோரி நாம் நாட­ள­விய ரீதியில் போரா­ட­வுள்ளோம். குறிப்­பாக நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் இணைந்து அந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் போராட்­டங்­களை நடத்­த­வுள்ளோம்.
இந்தபோராட்டத்தில் இன,மத, மொழி பேதமின்றி எமது சகோதரர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ சகோதரர்களும் தயாராகவுள்ள நிலையிலேயே நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்திற்கான அழைப்பு எம்மால் விடுக்கப்படுகின்றது என்றார். 
நன்றி: வீரகேசரி 

சனி, 22 அக்டோபர், 2016

ஜெயாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: ஆளுநர் மாளிகை


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் 22.10.2016 காலை 11.30 மணிக்கு சென்றார்.



       



அவரை தமிழக மூத்த அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கினார். பின்னர் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்று மருத்துவக் குழுவினரை சந்தித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிகிக்சை குறித்து கேட்டறிந்தார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாகவும். சிகிச்சையை தொடருமாறும் தெரிவித்துவிட்டு அப்பல்லோவில் இருந்து கிளம்பினார் ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : தமிழ்மிரர்

வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு


யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.




இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.
மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.





வெடிசத்தம் கேட்டது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு  துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.





விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த  இன்னுமொருவர்  தெரிவிக்கையில் ,  நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.




சம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.
அதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகாலை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின்று இருந்தார்கள்.
அதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
நான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி  வீட்ட  போகும்  போது தான்  விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.




அதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா ?

காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல்  நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.



CCTV கமராவில் பதிவான காட்சி. 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.


மதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.

சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.


பிரேத பரிசோதனை அறிக்கை.






உயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.  அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

 நன்றி : குளோபல் தமிழ் நியூஸ் இணையம்