வணக்கம் உறவுகளே..!
மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மினி சினிமா பகுதியூடாக குறுந்திரைப்படமொன்றின் விமர்சனத்தையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
இந்த வாரம் உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் குறுந்திரைப்படம் முள்ளந்தண்டுகள்.
கடல் கடந்து ஐரோப்பிய நாட்டில் வசித்து வரும் எம் ஈழத்து இளைஞர்கள் குழாமின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் ஆரம்பிக்கும் போதே "பிள்ளைகளின் குளிர் காய்தலுக்காய் விறகுகளாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்"
என்று ஆரம்பிக்கின்றது.
கடல் கடந்து சென்று, தம் நாளாந்த வாழ்க்கையை நடத்துவத்துக்கும், தமது சொந்த பந்தங்களின் வாழ்க்கையை ஒளியேற்றவும், வெயில், மழை, குளிர் என்று பொருட்படுத்தாமல் உயிரையும் துச்சமாக நினைத்து குடும்பம் சகிதம் அங்கு சென்று பணி புரிவோர் எத்தனையோ..
தாய், தந்தை, பிள்ளைகள் என அனைவரும் பகுதி நேரம் அல்லது முழு நேரம் என உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞனும் அவனது நண்பர்களும் தங்களின் வாழ்க்கையும், குடும்பத்தின் நிலையையும் மறந்து, உடலையும் உதிரத்தையும் உருக்கி, உழைக்கும் பணத்தினை ஊதாரித்தனம் பண்ணி, வாழ்க்கையை தொலைக்கும் சம்பவமே இக்கதையாகும்.
தாய் அன்பு காட்டவும், தந்தை கண்டிக்கவும் செய்யாவிட்டால், பிள்ளைகளின் நிலை இப்படித்தான் என்பதற்கு இக்குறுந்திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
அளவுக்கு மீறி தந்தை கொடுக்கும் செல்லமே, பின்நாளில் தந்தையை மிரட்டி பணம் பறிக்கவும் வைக்கின்றது. அதை கண்டிக்க முடியாத தந்தை, மறுக்க முடியாமல் பணத்தை கொடுக்கின்றார் ஏன் எதற்கு என்று கேட்கமுடியாமல்.. அதுவே அவன் விதியையும் மாற்றி எழுதப்போகின்றது என்பதை அறியாமல்.!
தவறான நண்பர்களுடன் நட்பை வைத்துக்கொள்ளும் இளைஞன், போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றான். காசுக்காக அப்பாவிடம் பணம் பறிக்கும் இளைஞன, பின்னர் வீட்டில் பணத்தை களவெடுத்துச் செல்கின்றான். போதைக்கு அடிமையான அவன், போதைக்கு முந்தியடிக்க முற்பட்டு, அது கைகலப்பில் நிறைவடைகிறது. அதோடு நிற்கவில்லை அது உயிரையும் குடிக்கின்றது .
நாட்டின் வருங்கால முதுகெலும்புகளாகிய இளைஞர்கள், முள்ளந்தண்டற்றவர்களாக வீணாய்ப் போவதை பற்றி 13 நிமிடங்களுக்குள் இயக்குனர் சொல்ல முனைந்திருக்கின்றார். அருமையான முயற்சி.
அருமையான பின்னணி இசையும் பாடகியின் குரலும் படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு. கோவிசன்க்கு ஒரு சபாஷ் போடலாம்.
கதை, திரைக்கதை, இயக்கம் : அஜந்தன்
ஒளிப்பதிவு : கோவி சன்
ஒளிப்பதிவு உதவி : சுதன்
பிரியன்
தாஸ்
எடிட்டிங் : ஷங்கர்
இசை : ஈஸ்வர்
இசைக்கலவை : பாபு
பாடகி : திபோஷனா
நடிகர்கள் : கிருஷ்
கவுதம்
ரமேஷ்
செல்வகுமார்
கணேஷ்
கீதம் மற்றும் பலர்..
தயாரிப்பு : நட்சத்திரம் பதிப்பகம்கவுதம்
ரமேஷ்
செல்வகுமார்
கணேஷ்
கீதம் மற்றும் பலர்..
மீண்டும் அடுத்த வாரம் மினி சினிமா பகுதியூடாக மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்..!! வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக