வணக்கம் உறவுகளே..
நம்மவர்களின் கலை திறமை இன்று பல விதங்களில் வெளிப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அவற்றில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இன்று அண்மையில் வெளிவந்த இரண்டு காணொளிப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அந்த வகையிலே முதலாவதாக : பொய்யடி
அண்மையில் பவனின் தயாரிப்பில் "பொய்யடி" என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்று வெளியானது.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
காரணம் காதல் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக அல்லது ஒருதலைக் காதலை கூறும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளது. அத்துடன் பாடல் காட்சியமைப்பும் பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹனி நாயகராவின் இசையில், கிஷோத் மற்றும் ஹனி ஆகியோரின் வரியில் இப்பாடல் அழகாக அமையப்பெற்றுள்ளது.
பாடல் காட்சியில் மனோஷாந்தன் மற்றும் ப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
காதலித்த பெண் விட்டுப் பிரிந்து போவது ஏமாற்றும் நோக்கம் மட்டுமல்ல, எம் மீது இருக்கும் அக்கறையிலும் கூட இருக்கலாம் என்று ஒரு செய்தியை சொல்லும் விதமாக பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த குழுவும் பாடலை திறம்பட கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்துள்ளனர் என்பது பாடலை பார்க்கும் அனைவருக்கும் காணக் கூடியதாக இருக்கும்.
அப்பாடலில் இறுதியில் சொல்லப்படும் செய்தியே பாடலின் பெரிய ஹைலைட் என்று சொன்னால் அது மிகையாகாது.
அப்பாடல் உங்களுக்காக...
Singer : Kishoth Chandru
Music : Honey Niagara
Lyrics : Kishoth & Honey
Mixing and Mastering : Honey Niagara
Cast : Manoshanthan, Priya Pragash
Direction and DOP : Bavananthan Nithiananthan
Editing : Chenduran Aravinthan
Violin : Athisaiyan Suresh
Flute : Sanjeevan Aravinthan
Screenplay : Glory Ana, Bavananthan, Manoshanthan, Vino Yaso
Art Direction : F R Anjelao
Assistant Direction : Vino Yaso, Glory Ana
அடுத்து அண்மையில் வெளிவந்த மற்றுமொரு சகோதர மொழி (சிங்கள) பாடல் "பம்பர பதம"
நீண்ட இடைவெளிக்கு பின் டிரோன் பெனாண்டோவின் இசையில், நம் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான நிரஞ்சனி ஷண்முகராஜாவின் புதிய அவதாரமாக பாடகியாக, அவரின் குரலில் சகோதரமொழிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
துரு துருவென இருக்கும் பெண்ணாக பாடல் காட்சியில் தோன்றி, பாடியும் இருக்கின்றார். டிரோனின் பாடல்கள் எப்போதும் புதிய முயற்ச்சியாக, புதியவர்களுக்கு களம் கொடுக்கும் விதமாக அமைவதுண்டு. அந்த வகையிலே தான் இப்பாடலும் அமைந்துள்ளது. பாடல் வரிகளை துமிந்தவும், ஒளிப்பதிவை துஷ்யந்தனும் சஞ்சீவனும் செய்துள்ளனர்.
இசைக்கலவை ராஜ்குமார்.
Music : Diron Fernando
Artist : Niranjani Shanmugaraja
Lyrics: Duminda Alahendra
Video: Varun Thushyanthan
Mixed n masterd by Raj Kumar (Raj K)
Shots: Seetharaman Sanjeevan
Production : Vassanthe Pradeep
Arunodayan Jenoosh Lawrence
Still: Lahiru Dilranga Silva
இந்தப் பாடல்கள் காணொளி வடிவில் புது முயற்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதுவும் இளைஞர்கள் தங்களால் சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்பதற்கு இவை சிறந்த சான்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக