சனி, 25 ஜூன், 2011

சிப்பிகளால் ஆன கோவில்..

சிப்பிகளால் ஆன கோவில்.. என்ற தலைப்பை பார்த்ததும் யோசித்திருப்பீர்கள் சிப்பிகளால் ஆன கோவிலா..?? இருக்குமா..?? சாத்தியப்படுமா என்று..??

நிச்சயமாக அது சாத்தியப்படும்.
பல ஆண்டுகளுக்கு முன், தாய்லாந்தின் தலைநகரும் பெரியநகரமுமான பாங்கொக் நகரில் தான் இந்த கோயில் அமையப்பெற்றிருக்கின்றது.

கண்ணைக்கவரும் வகையில் மட்டுமல்லாது வியந்து பார்க்கவும் வைக்கின்றது. முற்று முழுதாக கடலில் உள்ள சிப்பிகளினால் ஆன இக்கோயில், முழுதும் மிகப் பிரம்மாண்டமான சிலைகளாக உருவெடுத்து உயர்ந்து, வளர்ந்து காணப்படுகின்றது.

உண்மையில் இது கண்கொள்ளாக் காட்சி தான். அதனை அழகாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Temple of the Dawn என்று கூறுவார். அங்கு வணங்கப்படும் கடவுளை அருண் என்பர்.அருண் என்றால் சிவன். சூரியக்கடவுள் என்றும் கூறுகின்றனர்.
அங்கு காணப்படும் சிற்பங்களில் புகைப்படங்கள் இவை...!

The seashells and bits of porcelain used to make the mosaic designs had previously been used as ballast by boats coming to Bangkok from China. The full name of the temple is Wat Arunratchawararam Ratchaworamahavihara.


உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் சென்று பாருங்கள்.

இது சிற்பிக் கோயிலின் காணொளி...


வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..!!

வியாழன், 23 ஜூன், 2011

செவ்வந்தி பூவுக்கும்.. எம்மாமன் பொண்ணுக்கும்...

அண்மையில் வீட்டிலே இருக்கும் போது தொலைக்காட்சியில் பாடகர் தேர்வு நிகழ்ச்சியொன்றை பார்க்க கிடைத்தது. அதில் பங்குபற்றிய ஒருவர் பாடிய பாடல் ஒன்று மிகவும் என்மனதை கவர்ந்தது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின் அப்பாடலை கேட்க முடிந்தது.
வானொலிகளிலும் அப்பாடல் ஒலித்து நீண்ட காலமே..!! அப்பாடலை பாடியவரும் மிக அற்புதமாயும் பாடி இருந்தார்.
நேற்று தான் அப்பாடலை தேடினேன் இணையத்தில்...

"செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... என்மாமன் பொண்ணுக்கு.. சிங்கார கண்ணுக்கு.. என் பாட்டுனா சந்தோஷம் தான்..."

இப்பாடலை அந்த மனதை வருடும் இசையுடன் கேட்கும் போது உண்மையில் என்னையே மறந்து விட்டேன்...!
"புத்தம் புது பூவே" திரைப்படத்துக்காக இடம் பெற்ற பாடல் அது.

பாடலுக்கான இசை வழங்கி இருக்கின்றார் எஸ்.ஏ ராஜ்குமார். மிகச்சிறந்த ஒரு இசையமைப்பாளர். பல நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரைப் பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக குறிப்பிடுகின்றேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்.. யார் அந்த பாடலை பாடியுள்ளார்கள் என்றால் இரண்டு இசைக்குயில்கள் தான் பாடியுள்ளது.
1. ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னி கிருஷ்ணன்
2. பெண் குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த பிண்ணனிப் பாடகியான ஸ்வர்ணலதா.

அற்புதமாக இருக்கின்றது பாடல். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான மெட்டமைத்துள்ளார் ராஜ்குமார். நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம். இப்பாடலின் வரிகளை எழுதி இருக்கின்றார் தொல்காப்பியன்.
ஏனைய பாடல் வரிகளை சிநேகன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சரி நீங்களும் அப்பாடலை கேட்டுப் பாருங்களேன்.

1. செவ்வந்தி பூவுக்கும் (ஆண்) பாடல்...
பாடியவர்கள் :- உன்னி கிருஷ்ணன்
வரிகள்:- தொல்காப்பியன்

2. செவ்வந்தி பூவுக்கும் (பெண்) பாடல்...
பாடியவர்கள் :- ஸ்வர்ணலதா.
வரிகள்:- தொல்காப்பியன்
அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏனைய பாடல்கள்...

3. சாமந்தி பூவுக்கும் பாடல்...
பாடியவர்கள் :- ஜெயச்சந்திரன்
வரிகள்:- சிநேகன்

4. அல்பெல்லா பாடல்...
பாடியவர்கள் :- மனோ, அனுராதா ஸ்ரீராம்
வரிகள்:- சிநேகன்

5. ரெட்டை ஜடை பாடல்...
பாடியவர்கள் :- எஸ்.பீ பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்:- பிறைசூடன்

6. நிலவில் வீடு பாடல்...
பாடியவர்கள் :- சுனந்தா
வரிகள்:- சிநேகன்

7. காதல் ஒரு பாடல்...
பாடியவர்கள் :- சபேசன்
வரிகள்:- சிநேகன்


நிச்சியமாக நீங்களும் கேட்டு ரசித்திருப்பீர்கள்...!! மீண்டும் ஒரு புதிய பதிவுடன் வெகு விரைவில் சந்திக்கின்றேன் உறவுகளே..!! வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..!!

பின்னிணைப்பு பாடல் வரி..

"செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான். அம்மாடியோ கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிக்கும்.. அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்..!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான்...!!

இருவல்லிக் கொலுசாட.. எச பாட்டு நான் பாட.. கை தட்டும் பூந் தோட்டம் அத கேட்டு தான்.. மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட.. இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா... நெத்தியில சூரியன ஆற வச்சு பொட்டு வைப்பேன்.. மருதாணியில் மக ராணிய போர்த்தி வைப்பேன்.. மலரே உன் முன்னால தனியா நிப்பேன்....!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான்...!!

மனசெல்லாம் "மா"க்கோலம் நீ போட்ட பூக்கோலம் மலை தண்ணி பட்டாலும் அழியாதம்மா.. நாளெல்லாம் என்கூட நீ பேசி சிரிஷாலே அது போல சுகமேதும் கிடையாதம்மா... கண்ணாடியும் உன்முகத்த கண்ணாடியா பார்க்கும் கண்ணு... என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும்.. என் உசுரோட உன் பேச்சு ஒளியா மின்னும்...

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... அம்மாடியோ கொலுசு சத்தம்.. ஆதாரமா நெஞ்சில் நிக்கும்.. அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்..!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்...!!!"

சனி, 18 ஜூன், 2011

சனல் 4 தொடர்பான சர்ச்சைகள்..

அண்மையில் Channel 4 தொலைகாட்சியில் வெளியான காணொளி தொடர்பாக நாம் மட்டுமல்லாது முழு உலகமும் அதைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். என்ன செய்வது நாம் வெளிப்படையாக பேசினால் எமக்கும் ஒரு முத்திரை குத்திவிடுவார்கள் என்று பலரும் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர்..

இது இவ்வாறு இருக்கின்ற பொழுது, உலக நாடுகள் (குறிப்பாக) வீடியோ குறித்து இலங்கைக்கு பிரிட்டன் அழுத்தம் இதற்கு எதிர்ப்பும், கவலையும் வெளியிட்டுள்ளனர். இதில் அவர்கள் வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தியதையும், பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதையும் பார்த்து, அதிர்ச்சியடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்..

இந்நிலையில்அலிஸ்டயர் பர்ட் கருத்துக்கு இலங்கை அரசு கவலை வேறு தெரிவித்துள்ளது. மேலும் சனல் 4 ஆவணப்படத்தை அரசாங்கம் பரிசோதிக்கும்: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இலங்கை அரசு சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்...
அதேவேளை சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் சனல் இவ்வாறு வீடியோக்களை வெளியிட்டார்கள் எனவும் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவை இவ்வாறு முரண்பாடான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான ஐ.நாவின் செயற்பாடு குறித்து மீளாய்வு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை இரண்டாவது முறையாக பான் கீ மூன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதற்கு அரசு தமது பூரண ஆதரவை பான் கீ மூனுக்கு தெரிவித்துள்ளனர்.
எதற்காக ஆதரவு என்று கேட்டால்...?
1. போர்க்குற்ற விசாரணைக்கு ஒரு முக்காடு போடுவதற்கு..
2. அடிப்படையில் அவரும் பௌத்த மதத்தையும், அது சார்ந்த நாட்டின் பிரஜை என்பதாலும் இருக்கலாம்.
மூனும் அவ்வாறே யோசித்திருக்கலாம்.

இதற்கு பான் கீ மூனின் 2 ஆவது பதவிக்காலத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது ஏன்?: ஐ.தே.க. சார்பில் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சனல் - 4 வீடியோ தொடர்பான விசாரணை; நல்லிணக்க ஆணைக்குழு முஸ்தீபு தெரிவித்துள்ளது. தாங்கள் அதை பார்வையிட்டு காணொளி தொடர்பாக ஆராயவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

இவை இவ்வாறிருக்கின்ற பொழுது நேற்றைய தினம் இலங்கையில் சகோதர மொழி தொலைக்காட்சியொன்றில் இரவு பிரதான செய்தியறிக்கையின் போது இது பற்றி பேசப்பட்டது.

செய்தியறிக்கையின் காணொளி


அதில் கூறப்படுவது செய்தி வாசிப்பாளராக காண்பிக்கப்படும் பெண் இசைப்ரியா. விடுதலைப் புலிகளின் கரும்புலியின் ஒரு முக்கிய உறுப்பினர். இது அவருக்கு புலிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை.
அடுத்து வினோ.. இவர் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருக்கும் காஸ்த்ரோ சார்பாக செயற்ப்படுபவர்.. காஸ்த்ரோ என்பவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் சரி சமமாக இணைந்து செயற்பட்டவர்.

அடுத்து ரமேஷ்... இவரும் புலிகளின் முக்கிய ஒரு உறுப்பினர். இதைப்பற்றியெல்லாம் சனல் 4 பேசப்பட வில்லை... எமக்கு தெரியும் எமது படையினர் மக்களுக்கு எவ்வாறெல்லாம் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று......!!

அத்துடன் சரணடைந்த புலி உறுப்பினர்களும், காப்பாற்றப் பட்ட மக்களும் கூறும் கருத்துக்களும்.....!!

அவ்வாறு மக்களுக்காக செய்த சேவைகளும் காட்டப் படுகின்றது.

இவ்வாறு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதால் இறந்த உயிர்கள் மீளப் போவதில்லை.. போர் என்று வந்தால் அப்பாவி உயிர்கள் பலியாவது இது புதிதல்ல... அரசர் காலம் தொட்டு இவை இடம்பெறுகின்றது, இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆண்டுகள் பல கடந்தாலும் இது ஓயப்போவதில்லை..

வெள்ளி, 17 ஜூன், 2011

கண்ணா இது புது(சூ)...

பேஸ் புக், டுவிட்டர் ஆகிய சமூக இணைப்பு இணையத் தளங்களின் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. இத்தளங்களை பிரதிபலிக்கின்ற வகையில் சப்பாத்துக்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இதற்கு முன்னர் டீ-சேட்டுகள், தொப்பிகள் என்பவையும் வெளி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

அட கரீனா கபூர் கூட போடுறாங்க எண்டா பாருங்களேன்...

அப்போ இனி போற இடமெல்லாம் பேஸ் புக், டுவிட்டர் ஆக தான் இருக்க போகுது.. அட "சூ" வை சொன்னேன்பா...

சனி, 11 ஜூன், 2011

சப்பா.. புகை போகுதே....!!

புகை போகுது எண்டதும் எல்லாரும் ஓடி வந்திருப்பீங்க...! எனக்கு எவனாவது பின்னால வெடி கொளுத்திட்டான்களோ எண்டு பாக்க.... தெரியும் தானே எனக்கும்..., நீங்க எல்லாம் பாசக்கார பய புள்ளைங்கனு... சரி வந்தது வந்திட்டீங்க.. இந்த புகை போறத பத்தியும் கொஞ்சம் சொல்லிடுறேன்... புகை எண்டதும் புகை பிடிப்பது பற்றியான விழிப்புணர்வு எண்டு நினைக்கவேண்டாம்...! இது அதையும் தாண்டி ஒரு கலை நுட்ப பார்வையுடன் உங்களை பார்க்க அழைத்து செல்லப்போகின்றேன். பொதுவாக புகை என்பது புகையிலை இல் மட்டும் இல்லை.. வாகனங்களில், தீக்குச்சியில், விறகு+அடுப்பு எரியும் போது, மெழுகுதிரி, விளக்கு, ஊதுபத்தியில், சாம்பிராணியில், குப்பை எரிக்கும் போது என்று பல இடங்களில் பலவகையான பொருட்களில் நாம் காணக் கூடியதாக இருக்கும்...!! அதை எத்தனை பேர் கலை நோக்குடன் பார்வை இட்டுள்ளீர்கள்...??? அதில் கூட அழகான ஒரு கலையம்சம் உண்டு... அதையும் ஒரு கலை பார்வையுடன் பார்த்தால் நீங்களும் இனங்கண்டு கொள்ளலாம். சரி அப்படிப் பட்ட "புகை"ப்படங்களைத் தான் உங்களுக்கு காட்டப் போகின்றேன்.

வை மெழுகுதிரியில் இருந்து வரும் புகையினால் வரும் ஒரு நுட்பமான படம்.


ஒருவர் புகைப் பிடிக்கும் போது அவர் வாயில் இருந்து வரும் புகை.



இவை சிகரெட்டில் இருந்து வரும் புகைகளின் "புகை"ப்படங்கள்



தீக்குச்சியினால் வந்த புகைகள்

அவித்த முட்டையொன்றில் இருந்து வெளிவரும் புகை

சமைக்கும் போது அடுப்படியில் இருந்து வரும் புகை.

இவை மின்குமிழில் இருந்து வெளியேறுபவை

பல வகையான நிறங்களில் வெளியேறும் புகைகள் இவை...!

சரி எல்லாரும் எனக்கு, சாரி என் பதிவில புகை போறத பார்த்தீங்களா..??? மீண்டும் மற்றுமொரு புதிய பதிவுடன் சந்திக்கிறேன்...! வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.!!

லாஜிக் இல்லா மாஜிக்

லாஜிக் இல்லா மாஜிக் எண்டதுமே எண்டா எண்டு பார்க்க வந்த அன்பு உள்ளங்களுக்கு வணக்கமுங்கோ...

பொதுவா இந்த லாஜிக் என்ன எண்டு கேட்டா நம்ம பய புள்ளைங்க சொல்லுவாங்க பகுத்தறிஞ்சு கொள்ளுறதுனு.. சரி நான் அதைப் பற்றி ஆராய போகல. ஆனா நான் இப்போ உங்களுக்கு காட்ட போறது நம்ம பய புள்ளைங்க லாஜிக் இல்லாம பண்ணுன வேலைகள போட்டோ புடிச்சு காட்ட போறேனுங்க சாமி...

முதல்ல பாக்க போறது இந்த பய புள்ள லோஜிக்கே இல்லாம ஆற்றில் விழுந்த கார எடுக்க போனத பற்றி தான். விழுந்த கார பாரந் தூக்கி வச்சு லாஜிக் இல்லாம தூக்க போயிட்டு, தல கீழா கவுந்த கதைய தான்.

இதுக்கு தான் சொல்லுறது எதையும் பிளான் பண்ணி பண்ணனும்னு..


சரி அடுத்ததா பாக்கப் போறது நம்ம பய புள்ளைங்க அன்றாடம் லாஜிக் இல்லாம பண்ணுற மாஜிக் வேலைகள தான்...

"எப்பூடி...?? குப்பையே கூடையில வச்சு கொண்டு போறவங்க நாம... குழந்தைய கொண்டு போக மாட்டமா...??"

"சிவனுக்கு நெத்தில கண் எண்டா நமக்கு உடம்பு பூரா கண்ணு..."

"நாம எல்லாம் ப்லேன்லையே நிண்டுக்கிட்டு போனவங்க..."

"MR.ஹனுமான் சஞ்சீவி மலைய உள்ளங்கைல தூக்கி கிட்டு வரும் போது, நாம "கான்" மலைய "பைக்" ல கொண்டுவர மாட்டமா...?? ஹீ... ஹீ..."

"போற வழில கால் வலிச்சா உக்காரதுக்கு தான் 'ஸ்டாண்ட் பை' யா..."

"நாம எல்லாரும் சேர்ந்து 'பைக்' ல பறப்போம் என...??"

விட்டா.. விஜயகாந்தையே மிஞ்சிடுவார் போல இருக்கே...?? :(

பின்னாடி வர வாகனத்த பார்க்க எம்புட்டு பெரிய கண்ணாடி...

"இமைய மலைக்கு போரம்... அதுக்கு தான் இந்த ஏணி"

எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்...

ம்ம்... எல்லாரும் ரொம்ப நல்லா ரசிச்சு பார்த்தீங்களா...??? அப்ப எல்லாரும் ஒருக்கா ஜோரா கை தட்டுங்க பாப்போம்...?? ஓகே சாமி மீண்டும் இன்னொரு பதிவோட உங்க எல்லாத்தையும் சந்திக்கிறேன்... அதுவரைக்கும் வணக்கமுங்கோ சாமியோ...!!! ஹீ... ஹீ....!!