புதன், 26 அக்டோபர், 2016

கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : வீதியில் டயர்கள் எரிப்பு


கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.

இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.



பின்னர் கலகம் அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காணொளி : வீரகேசரி இணையம் 


மினி சினிமா


வணக்கம் உறவுகளே..!
மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மினி சினிமா பகுதியூடாக குறுந்திரைப்படமொன்றின் விமர்சனத்தையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
இந்த வாரம் உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் குறுந்திரைப்படம் முள்ளந்தண்டுகள்.






கடல் கடந்து ஐரோப்பிய நாட்டில் வசித்து வரும் எம் ஈழத்து இளைஞர்கள் குழாமின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் ஆரம்பிக்கும் போதே "பிள்ளைகளின் குளிர் காய்தலுக்காய் விறகுகளாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்"
என்று ஆரம்பிக்கின்றது.

கடல் கடந்து சென்று, தம் நாளாந்த வாழ்க்கையை நடத்துவத்துக்கும், தமது சொந்த பந்தங்களின் வாழ்க்கையை ஒளியேற்றவும், வெயில், மழை, குளிர் என்று பொருட்படுத்தாமல் உயிரையும் துச்சமாக நினைத்து குடும்பம் சகிதம் அங்கு சென்று பணி புரிவோர் எத்தனையோ..

தாய், தந்தை, பிள்ளைகள் என அனைவரும் பகுதி நேரம் அல்லது முழு நேரம் என உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞனும் அவனது நண்பர்களும் தங்களின் வாழ்க்கையும், குடும்பத்தின் நிலையையும் மறந்து, உடலையும் உதிரத்தையும் உருக்கி, உழைக்கும் பணத்தினை ஊதாரித்தனம் பண்ணி, வாழ்க்கையை தொலைக்கும் சம்பவமே இக்கதையாகும்.


தாய் அன்பு காட்டவும், தந்தை கண்டிக்கவும் செய்யாவிட்டால், பிள்ளைகளின் நிலை இப்படித்தான் என்பதற்கு இக்குறுந்திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
அளவுக்கு மீறி தந்தை கொடுக்கும் செல்லமே, பின்நாளில் தந்தையை மிரட்டி பணம் பறிக்கவும் வைக்கின்றது. அதை கண்டிக்க முடியாத தந்தை, மறுக்க முடியாமல் பணத்தை கொடுக்கின்றார் ஏன் எதற்கு என்று கேட்கமுடியாமல்.. அதுவே அவன் விதியையும் மாற்றி எழுதப்போகின்றது என்பதை அறியாமல்.!

தவறான நண்பர்களுடன் நட்பை வைத்துக்கொள்ளும் இளைஞன், போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றான். காசுக்காக அப்பாவிடம் பணம் பறிக்கும் இளைஞன, பின்னர் வீட்டில் பணத்தை களவெடுத்துச் செல்கின்றான். போதைக்கு அடிமையான அவன், போதைக்கு முந்தியடிக்க முற்பட்டு, அது கைகலப்பில் நிறைவடைகிறது. அதோடு நிற்கவில்லை அது உயிரையும் குடிக்கின்றது .

நாட்டின் வருங்கால முதுகெலும்புகளாகிய இளைஞர்கள், முள்ளந்தண்டற்றவர்களாக வீணாய்ப் போவதை பற்றி 13 நிமிடங்களுக்குள் இயக்குனர் சொல்ல முனைந்திருக்கின்றார். அருமையான முயற்சி.







அருமையான பின்னணி இசையும் பாடகியின் குரலும் படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு. கோவிசன்க்கு ஒரு சபாஷ் போடலாம்.

கதை, திரைக்கதை, இயக்கம் : அஜந்தன்
ஒளிப்பதிவு : கோவி சன் 

ஒளிப்பதிவு உதவி : சுதன்
                                     பிரியன்
                                     தாஸ்
எடிட்டிங் : ஷங்கர் 

இசை : ஈஸ்வர் 
இசைக்கலவை : பாபு 
பாடகி : திபோஷனா
நடிகர்கள் : கிருஷ்
                      கவுதம்
                      ரமேஷ்
                      செல்வகுமார்
                      கணேஷ்
                      கீதம் மற்றும் பலர்..
தயாரிப்பு : நட்சத்திரம் பதிப்பகம்

மீண்டும் அடுத்த வாரம் மினி சினிமா பகுதியூடாக மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்..!! வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...!!

திங்கள், 24 அக்டோபர், 2016

Female ex-employee reveals the rampant abuse by frustrated officials at Cricket's head office - ஆங்கிலப் பதிவு


இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் பாலியல் ரிதீயாக துன்புத்தல்களுக்கு ஆளானாரா..??
மனம் திறக்கின்றார்.
இது ஓர் ஆங்கிலப் பதிவு..


Sexual demands, groping, touching, lude comments and verbal abuse of helpless and silent female employees are common occurrences inside the glamourous offices of Sri Lanka Cricket (SLC) according to the official testimony of a former female Executive officer of the country’s most internationally recognized corporate body.

In a startling revelation made during a formal disciplinary hearing, SLC’s former Confidential Secretary in the Marketing Division, Gayathri Wickramasinghe has exposed the dirty underbelly of the creature that in Sri Lankagoverns what is supposedly the “gentlemen’s game”.

“During the tenure of my service with SLC, I have faced harassments including sexual harassment and perversion by, certain personnel of SLC. I have been offered with club memberships in order to call for evening drinks and certain individuals have related about their extra marital affairs during the official working hours with me” revealed Wickramasinghe in her statement at a recent inquiry against her.






“Even I have faced sexual harassment physically. In fact, I reported one incident in 2012, to then CEO Mr. Ajith Jayasekara and he has taken the matter up with the then President Mr, Upali Dharmadasa who sorted out the issue,” she added.

“The individuals I have mentioned here are certain employees of SLC and certain Ex-co members of the SLC. I do not want to divulge the names of them but I would do when the necessity arises. Being an unmarried lady, I did not want to complain and tarnish my image, myself due to the reason of manipulation and finally publishing all bogus stories against the innocent parties,” she said.

“However bogus stories about me have been published in tabloids and newspapers. Later on “Ceylon Today” dated 17th September 2014 published an apology. I was the only female involved in organizing tournaments. During the time I was working with tour organizing I have faced sexual harassments and perversion from certain support staff individuals as well” said Wickramasinghe.

She went on to drop a bombshell when she claimed that the termination of her employment at SLC was mainly due to her refusal to co-operate with the sexual demands of some perverted officials.
“Having stated all these harassments during the past, I feel the allegations which are stated in my charge sheet are meaningless, baseless, lack of coherence and (levelled) to take revenge from me for not obeying them” she stated.

Subsequently, websites published stories about Wickramasinghe’s allegations, though without solid proof and she felt it obviously was the work of frustrated SLC officials hell-bent on destroying her for not acceding to their perverse sexual demands. It bore all the hallmarks of their usual modus operandi.

Then on September 7, SLC’s COO Jerome Jayaratne quoted these web stories and a newspaper article and asked her for a “detailed report” of the alleged harassment she faced as they were “serious allegations”.

However, she did not respond as she had more than enough reason to lose confidence of SLC and its officialdom and felt it was another attempt to ridicule her more through web-site mudslinging.


Wickramasinghe, though many may not know her by name, rose to prominence in Sri Lanka as much as SLC’s international cricketers in recent years largely thanks to the no-holds barred, un-governed and un-monitored world of cyber journalism which today is a free-for-all and seen by many as a monster beyond control.

Stories made up, according to Wickramasinghe, by frustrated SLC officials often spread like wild fire on gossip media though they had no shred of evidence and sometimes forced SLC to conduct investigations, only to find they held no water.

A weird story of spending a night with a cricketer during a Test match was one such story. A shocking allegation of altering a receipt for a false claim was another example. There are several such examples that made her famous or infamous in the cricket circles.

Wickramasinghe by nature is outgoing, confident and straightforward. She is talented and was good at her job, exactly the things despised by uneducated and incompetent officials and their henchmen who roamed the offices of SLC. So they resorted to alleged sexual harassment and spreading gossip to get the better of her. Finally, they got rid of her but through flimsy charges, most of which were rejected by her immediate supervisor.

Interestingly, among the charges for her sacking are none to say that she was incompetent. Among the charges levelled by SLC are brushing her hair, applying make-up and painting her nails in the office, talking too loudly on the phone and getting late to come to office though she had covered those hours by staying well behind the closing hours to cover the work assigned to her.

In fact, Wickramasinghe had worked for an extra 39 hours and two minutes more than her stipulated working hours during the period SLC had investigated according to information transpired at the inquiry. Her superior officer confirmed at the inquiry that she had come to office late as she was assigned to collect cheques from SLC sponsors on her way to office.

So frustrated by the sudden sacking even without a letter of warning, Wickramasinghe was forced to come up with the harassment she had silently endured at the hand of some officials. She said she feared reprisals from officials if she revealed them at the time she was working but felt the suffering was meaningless, when she heard of the ridiculous charges trumped-up to get rid of her.

She told “Daily Mirror” that current SLC officials suspected her of links with their rival parties and have gone to extremes to find a reason to get rid of her.

In his evidence, Wickramasinghe’s superior Vajira Dassanayake, the then head of Marketing at SLC gave a clear picture on how things developed. Recalling a SLC meeting on May 30, Dassanayake said “He (SLC President) told the staff present that he is aware of information leaking out due to the conduct of some staff members. He further told that he would take appropriate action to remove such obstacles and he is aware of the proper legal mechanism to achieve such an action”.

Wickramasinghe, describing the said meeting in her statement stated; “The President SLC accused the personnel who were present there for leaking confidential information to the media. He further stated that he had further identified the people through his sources who support the opposed parties to SLC. Also the President stated in a threatening tone that he will be taking action against the employees from tomorrow as he has identified them as obstacles for his future plans. He further stated that he very well knew the law and he knows how to tackle the situation”.

Recalling what happened the following day Dassanayake added: “CEO called me to his office and reluctantly handed over a letter of suspension for a period of three months. After half an hour I got to know that the accused officer (Wickramasinghe) has also been given a similar suspension order.”

(By Channaka de Silva)

நன்றி : Dailymirror இணையம் 


பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.!



யாழ். பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.







காலை 10 மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது.






அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்துவிட்டனா். அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் இங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது. மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது பல்கலைகழக மாணவா்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.






பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.


ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சகல பல்கலைக்கழகங்களிலும் நீதிகோரி நாளை முதல் போராட்டம்

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் மர­ணத்­திற்கு நீதி கோரி நாளை முதல் சகல பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தாக அனைத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது.  
கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்­டாளர் லகிரு வீர­சே­கர மேற்­கண்ட வாறு தெரிவித்தார்.  



அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,  
யாழ்ப்­பாணம் நக­ருக்கு அண்­மித்த குளப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி மாண­வர்கள் இருவர் மர­ண­ம­டைந்­துள்­ளனர். ஆரம்­பத்தில் இந்த சம்­பவம் விபத்து என அறி­விக்­கப்­பட்ட போதும் பின்னர் மரண பரி­சோ­த­னை­களின் பிர­காரம் துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.  
அதன் அடிப்­ப­டையில் பொலிஸார் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்கள் பணி­நீக்­கமும் செய்­யப்­ப­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  எவ்­வா­றா­யினும் மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கி பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்­துள்ள இச்­சம்­ப­வத்தை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.  
2012ஆம் ஆண்டு கண்­டி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி நடத்­தப்­பட்ட பேர­ணியின் போது களனி பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் இதே­போன்று தான் விபத்தில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட போதும் அது விபத்து அல்ல திட்­ட­மிட்டு செய்­யப்­பட்ட கொலை என்று தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  
இதை­யொத்த சம்­ப­வ­மா­கவே யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது இடம்­பெற்ற துப்­பாக்கி பிர­யோக சம்­ப­வத்­தையும் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. பொலிஸார் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள நிலையில் பொலிஸ் கட்­ட­மைப்பை நிரு­வ­கிக்கும் அர­சாங்­கமே அதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் ஏற்று பதில் கூற­வேண்­டி­யுள்­ளது.   
அத­ன­டிப்­ப­டையில் உயி­ரி­ழந்த குறித்த இரு மாண­வர்­க­ளுக்­காக நீதி கோரி நாம் நாட­ள­விய ரீதியில் போரா­ட­வுள்ளோம். குறிப்­பாக நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் இணைந்து அந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் போராட்­டங்­களை நடத்­த­வுள்ளோம்.
இந்தபோராட்டத்தில் இன,மத, மொழி பேதமின்றி எமது சகோதரர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவ சகோதரர்களும் தயாராகவுள்ள நிலையிலேயே நாளை திங்கட்கிழமை முதல் போராட்டத்திற்கான அழைப்பு எம்மால் விடுக்கப்படுகின்றது என்றார். 
நன்றி: வீரகேசரி 

சனி, 22 அக்டோபர், 2016

ஜெயாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: ஆளுநர் மாளிகை


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் 22.10.2016 காலை 11.30 மணிக்கு சென்றார்.



       



அவரை தமிழக மூத்த அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கினார். பின்னர் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்று மருத்துவக் குழுவினரை சந்தித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிகிக்சை குறித்து கேட்டறிந்தார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாகவும். சிகிச்சையை தொடருமாறும் தெரிவித்துவிட்டு அப்பல்லோவில் இருந்து கிளம்பினார் ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : தமிழ்மிரர்

வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு


யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.




இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.
மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.





வெடிசத்தம் கேட்டது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு  துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.





விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த  இன்னுமொருவர்  தெரிவிக்கையில் ,  நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.




சம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.
அதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகாலை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின்று இருந்தார்கள்.
அதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
நான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி  வீட்ட  போகும்  போது தான்  விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.




அதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா ?

காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல்  நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.



CCTV கமராவில் பதிவான காட்சி. 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.


மதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.

சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.


பிரேத பரிசோதனை அறிக்கை.






உயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.  அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

 நன்றி : குளோபல் தமிழ் நியூஸ் இணையம் 

ஏழு நாளில் 5 கிலோ எடையை குறைக்கும் சூப்பரான பானம்!



உடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளது.


நம் உடலில் தேங்கி உள்ள கெட்டக் கொழுப்புகளை வேகமாக கரைத்து, உடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம் மிகவும் மிக்கிய பங்கு வகிக்கிறது.


மேலும் பட்டை, தேன், வெந்நீர் ஆகியவை கலந்த, இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பானம் ஏழு நாட்களில் ஐந்து கிலோ எடையை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.


பொதுவாகவே தேன் மற்றும் பட்டைகள் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கிறது.


எனவே இவைகள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி அதிகப்படியான உடல் பருமனை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.




தேவையான பொருட்கள்
பட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 பெரிய டம்ளர்
எலுமிச்சை சாறு – தேவைப்பட்டால் சிறிதளவு


செய்முறை


ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.


பின் அதனுடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.


சிறிது நேரத்திற்கு பின் நீர் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்தால், இயற்கை பானம் தயார்.


இந்த இயற்கை பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஒரு வாரத்திலேயே 5 கிலோ எடை குறைந்து இருக்கும்.

நன்றி :  இணையம் 

உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங்க் ஆகின்றதா?

என்ன தான் பார்த்து பார்த்து வாங்கினாலும் உங்கள் ஸ்மார்ட்போன் வாங்கிய சிறிது நாட்களுக்குள்ளேயே ஹேங்க் ஆவ தொடங்கிவிடும். உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆவதை தடுக்க நீங்கள் ஒரு சில ஆப்களை அழித்தாலே போதும்.


ஸ்மார்ட்போன் வாங்கி சிறிது நாட்களுக்குள்ளேயே ஹேங்க் ஆவதற்கு அதில் நீங்கள் ஸ்டோர் பண்ணியுள்ள ஆப்(app) தான் காரணம். அவற்றை டெலிட் செய்தால் போதும் உங்க போன் சும்மா தாறு மாறா வொர்க் ஆகும். முக்கியமாக நீங்கள் டெலிட் செய்யவேண்டிய அப்ளிகேஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.









ஃபேஸ்புக் பயன்பட்டால் போனின் வேகம் குறையும். ஆகவே ஃபேஸ்புக்கை கணினி மூலம் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

மேலும் போன் வாங்கும் போதே சில பிரௌசர்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த பிரௌசர்களும் உங்கள் ஸ்மார்ட்போனின் வேகத்தைக்குறைக்கும் அதை டெலிட் செய்துவிட்டு, புதிதாக ஒரு பிரௌசரை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பருவநிலை, வெப்பநிலை அறியப் பயன்படும் வெதர் ஆப்கள் உங்கள் போனின் வேகத்தை குறைக்கும். ஆன்டி வைரஸ் ஆப் கூட ஒரு காரணம் என்றால் அதிர்ச்சியாக உள்ளதா? ஆம் அதனையும் டெலிட் செய்ய வேண்டும். கிளீனிங் ஆப் கூட உங்கள் போனுக்கு ஆப்பு வைக்கிறதாம். அதனால் அதையும் உங்கள் போனில் இருந்து தூக்கி விடுங்கள்.

யாரும் அறிந்திராத உலகின் பிரமாண்ட சுரங்கம்

இந்த படத்தில் உள்ள மலையில் ஒரு ஓட்டை தெரிகிறதல்லவா? இது சாதாரணமாக எல்லா மலைகளிலும் இருக்கும் சிறுசிறு ஓட்டைகள், பாறையில் இருக்கும் பள்ளங்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அந்த சிறிய ஓட்டைதான் உலகின் மிகப்பெரிய குகையாம்.
இந்த குகை வியட்நாமில் இருக்கிறது. இந்த குகையின் பெயர் சோன் டூங்க். இது வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து 280 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. அந்த குகைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?
சோன் டூங்க் என்பதற்கு மலைச்சிகரமும் ஆறும் குகையும் ஒன்றாக இருக்கும் இடம் என்பது பொருள். இந்த குகை 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் நீண்ட காலங்களாக இந்த குகை யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கிறது,





















1991 ஆம் ஆண்டு அந்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு உள்ளூர் விவசாயி தான் இந்த குகையை முதன்முதலாக கண்டறிந்திருக்கிறார். ஆனால் அங்கு யாரும் சென்றதில்லை.


இதையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு தான் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் முதன்முதலாக அந்த குகைக்கு பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த சிறிய ஓட்டைக்குள் உள்ள குகை 87 மைல் நீளமுடையது.
இந்த குகைக்குள் பல விலங்குகள் வாழ்கின்றன. ஏரி, ஆறு, மழை பெய்துகொண்டே இருக்கும் அடர்ந்த காடுகள், சிறிய கடற்கரை, ஆறு என அத்தனையும் அந்த ஓட்டைக்குள் இருக்கின்றனவாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட பல குகைகளிலும் சிற்பங்கள், ஓவியங்கள் என குகை சுவர்களில் இருக்கும். ஆனால் அதுபோன்ற எந்த சுவடுகளுமே இந்த குகைக்குள் இல்லை என்பது தான் மிக ஆச்சர்யம்.
பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் 2009 – ல் இங்கு சென்று பார்த்து வந்த பிறகு வியட்நாம் அரசால் இந்த குகை சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டது.
2013 ஆண்டிலிருந்து தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த குகைக்குள் அழைத்துச் சென்று சுட்டிக்காட்ட வழிகாட்டிகளும் (கெய்டு) இங்கு இருக்கிறார்கள். வியட்நாம் அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து தரும் இந்த சுற்றுலா 7 நாட்கள் கொண்ட டூர் பேக்கேஜ்.
இந்த டூருக்கான கட்டணமாக 2300 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன. இது 1500 யூரோவுக்கு சமம்.
இந்த கட்டணத்திலேயே 5 நாட்கள் குகைக்குள் கேம்ப் ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும்.

அதிக செல்வ வளம் மிக்க குகை இது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீரூற்றுகள் மற்றும் மழைச்சாரல், அருவி நீர் ஆகியவை சேர்ந்து அங்கிருக்கும் மணல் மறறும் பாறைகளை முத்துக்கள் வாரி இறைத்து கட்டப்பட்டது போன்ற தரைப்பகுதியை உருவாக்கியிருக்கிறது. இதுபோன்ற அற்புதத்தையும அதிசயங்களையும் உலகின் வேறு எந்த குகைகளிலும் பார்க்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


'பெர்முடா முக்கோணத்தின்’ மர்மம் நீங்கியது

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள்.





இந்த பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் கடல் பகுதியாகும். இந்த கடல்பகுதி 5 லட்சம் கிலோமீட்டர் சதுரடி பரப்பளவு கொண்டது ஆகும்.





இந்த முக்கோணக் கடல்பகுதியில் எண்ணற்ற கப்பல்கள் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியாததால், ஏலியன்ஸ் என்பன உள்ளிட்ட மர்ம கதைகள் உலவ ஆரம்பித்தன. இதனால், இதை பேய் முக்கோணம் என்று லத்தீன் அமெரிக்காவில் அழைக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையில், மெக்ஸிகோவின் ஆறு பிளைட் 19 விமானங்கள் காணாமல்போனதும். அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.





இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில் நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.

இது குறித்து ஸ்டீவ் மில்லர் என்ற கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் கூறுகையில், “பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும்.

ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யபட்டது. அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும் காற்று வெடி வெடிகுண்டுகள், [Air bombs] போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது” என்றார்.

எனவே, இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸார் நவம். 4ஆம் திகதிவரை சிறை


 

இன்று காலை யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பொலிஸாருக்கும் வருகிற நவம்பர் மாதம் 4ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.
மேலும் வருகிற திங்கட்கிழமை (24-10-2016) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு.
காணொளியைக் காண லிங்க்கை கிளிக்கவும் .

யாழ். பல்கலை இரு மாணவர்கள் உயிரிழப்பு; ஐந்து பொலிஸார் கைது

யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.







இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆர்ம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டிருந்தது.

கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.



இதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸார்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Creative & Crazy Tissue Paper Boxes


துடைப்பதுக்காக பயன்படுத்தும் திசு தாள் பெட்டிகள் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் புதுமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புகைப்படங்கள் இதோ..




















 

நன்றி பட உதவி :- Funonthenet