சனி, 22 அக்டோபர், 2016

யாரும் அறிந்திராத உலகின் பிரமாண்ட சுரங்கம்

இந்த படத்தில் உள்ள மலையில் ஒரு ஓட்டை தெரிகிறதல்லவா? இது சாதாரணமாக எல்லா மலைகளிலும் இருக்கும் சிறுசிறு ஓட்டைகள், பாறையில் இருக்கும் பள்ளங்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அந்த சிறிய ஓட்டைதான் உலகின் மிகப்பெரிய குகையாம்.
இந்த குகை வியட்நாமில் இருக்கிறது. இந்த குகையின் பெயர் சோன் டூங்க். இது வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து 280 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. அந்த குகைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?
சோன் டூங்க் என்பதற்கு மலைச்சிகரமும் ஆறும் குகையும் ஒன்றாக இருக்கும் இடம் என்பது பொருள். இந்த குகை 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் நீண்ட காலங்களாக இந்த குகை யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கிறது,





















1991 ஆம் ஆண்டு அந்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு உள்ளூர் விவசாயி தான் இந்த குகையை முதன்முதலாக கண்டறிந்திருக்கிறார். ஆனால் அங்கு யாரும் சென்றதில்லை.


இதையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு தான் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் முதன்முதலாக அந்த குகைக்கு பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த சிறிய ஓட்டைக்குள் உள்ள குகை 87 மைல் நீளமுடையது.
இந்த குகைக்குள் பல விலங்குகள் வாழ்கின்றன. ஏரி, ஆறு, மழை பெய்துகொண்டே இருக்கும் அடர்ந்த காடுகள், சிறிய கடற்கரை, ஆறு என அத்தனையும் அந்த ஓட்டைக்குள் இருக்கின்றனவாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட பல குகைகளிலும் சிற்பங்கள், ஓவியங்கள் என குகை சுவர்களில் இருக்கும். ஆனால் அதுபோன்ற எந்த சுவடுகளுமே இந்த குகைக்குள் இல்லை என்பது தான் மிக ஆச்சர்யம்.
பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் 2009 – ல் இங்கு சென்று பார்த்து வந்த பிறகு வியட்நாம் அரசால் இந்த குகை சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டது.
2013 ஆண்டிலிருந்து தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த குகைக்குள் அழைத்துச் சென்று சுட்டிக்காட்ட வழிகாட்டிகளும் (கெய்டு) இங்கு இருக்கிறார்கள். வியட்நாம் அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து தரும் இந்த சுற்றுலா 7 நாட்கள் கொண்ட டூர் பேக்கேஜ்.
இந்த டூருக்கான கட்டணமாக 2300 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன. இது 1500 யூரோவுக்கு சமம்.
இந்த கட்டணத்திலேயே 5 நாட்கள் குகைக்குள் கேம்ப் ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும்.

அதிக செல்வ வளம் மிக்க குகை இது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீரூற்றுகள் மற்றும் மழைச்சாரல், அருவி நீர் ஆகியவை சேர்ந்து அங்கிருக்கும் மணல் மறறும் பாறைகளை முத்துக்கள் வாரி இறைத்து கட்டப்பட்டது போன்ற தரைப்பகுதியை உருவாக்கியிருக்கிறது. இதுபோன்ற அற்புதத்தையும அதிசயங்களையும் உலகின் வேறு எந்த குகைகளிலும் பார்க்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக