வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே....!! கடந்த சில நாட்களாக கொஞ்சம் வேலைப் பளு காரணமாக அதிகமான பதிவுகள் இட முடியவில்லை... இருந்தும் வாரா வாரம் இட்டு வருகின்ற நெஞ்சில் நின்ற ராகம், மினி சினிமா ஆகிய பகுதிகள் கட்டாயம் பதிவிடுவேன். அண்மைக்காலமாக அதிகமான சக பதிவர்கள், இன்னும் பலர் எனது வலைப் பதிவை வாசகர் வருகை தருகின்றீர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தருவதோடு உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை இன்னும் எனது எழுத்தாற்றலை வளப்படுத்தும் என நம்புக்கின்றேன்...!!

சரி விஷயத்துக்கு வருவோம். வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் என்ற பகுதியூடாக இனிய இடைக்காலப் பாடல்களை பகிர்ந்து வருகின்றேன். அந்தவகையில் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளும் பாடல் "வாடாத ரோசாப்பூ..."


வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்..

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்....
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்....

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு...
கையோடு சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு..
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு...
முடிவேதும் தெரியாம மோகம் தப்பி போச்சு.. அம்மாடி...
அம்மாடி ஊரெல்லாம் போலி வேஷம்....
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்...

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்..

காத்தோட போயாச்சு என்னோட பாரம்...
ஆத்தோட போயாச்சு ஏன் கால நேரம்...
காத்தோட போயாச்சு என்னோட பாரம்...
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம் அம்மாடி...
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம் எல்லாமே தப்பாச்சு ஏதோ நேரம்....

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்...
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...


அழகான சோகப் பாடல்.... 1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆந் திகதி வெளியான "கிராமத்து அத்தியாயம்" திரைப் படத்துக்காக இடம் பெற்ற பாடல். C.ருத்ரையாவின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் தெவிட்டாத, மனதை வருடும் மெல்லிசையில், S.P பாலசுப்ரமணியம் பாடிய இனிய காதல் சோகப் பாடல்.
இந்த திரைப்படத்தில் சந்திரஹாசன், நந்த குமார், ஸ்வர்ணலதா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். இந்த ஸ்வர்ணலதா யார் என்று தெரியுமா..?? கடந்த வருடம் எம்மை விட்டு பிரிந்து சென்ற பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாவே தான்.

மீண்டும் அடுத்த வாரமும் இன்னுமொரு இனிய இடைக்காலப் பாடலுடன் நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன். வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக