வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் மினிசினிமா பகுதியூடாக சிறந்த தமிழ் குறுந் திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரமும் உங்களுடன் ஒரு அழகான கதையம்சம் கொண்ட குறுந் திரைப்படம் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் ஈசல்.
பொதுவாகவே ஈசலுக்கு ஆயுள் குறைவு எனலாம். காரணம் அது மின்குமிழை அல்லது ஒளியை சுத்தி சுத்தி திரிந்து இறுதியில் அந்த ஒளியிலே அல்லது வெப்பத்திலே தன் உயிரையும் விட்டுவிடும். அவ்வாறே இந்த ஈசல் திரைப்படமும்....
ஈசலும் காதலும் ஒன்று எனலாம். காரணம் இந்த காதல் சிலவேளைகளில் உயிரைக் கொடுக்கும் சிலநேரங்களில் உயிரை எடுக்கும். காதல் என்றால் அன்பு. இந்த அன்பிலே சந்தேகம் வந்தால் எப்படி இருக்கும்..??? சந்தேகம் எப்போதும் தன்னை மட்டும் இல்லாமல் சுத்தி இருக்கின்றவர்களையும் அழித்துவிடும். இந்த ஈசல் கதையும் அவ்வாறே....!
இரு காதலர்கள்... வழக்கம் போல் பெண்ணுக்கு தன் காதலன் மீது சந்தேகம் எப்போதும்.. ஒரு கட்டத்தில் அப்பெண் தொலைபேசி அழைப்பெடுக்கும் போது அவன் வேறொரு அழைப்பில் இருந்திருக்கின்றான். இந்த சம்பவம் பெரிதாக வெடிக்கின்றது. அவளிடம் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் செவிமடுப்பதாய் இல்லை. இறுதியில் கோபத்தோடும், மன உளைச்சலோடும், வெறுப்போடும் பைக்கில் ஏறி வருகின்றான். அதன் பின்பு நடப்பது என்ன....??? இது தான் படத்தின் உச்சக்கட்ட காட்சி.... அவன் மட்டும் இல்லாது அவனால் சுத்தி இருக்கின்றவர்களும் பாதிக்கப் படுகின்றார்கள். அழகாகவும் ஆழமாகவும் எடுத்துக் காட்டப் படுகின்றது.
ஒரு காதலால் இல்லை ஒரு சந்தேகத்தால் இரு காதலும் இரு உயிரும் எவ்வாறு சிதைவடைகிறதென்பதை எல்லோருக்கும் தெட்டத் தெளிவாக எடுத்து சொல்லுகின்றது. ஒவ்வொரு காதலனும், விசேடமாக காதலிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
பெண்கள் தாங்கள் என்ன செய்கின்றோம்..?? எப்படி செய்கின்றோம்.??? அதன் பின் விளைவு என்ன..?? தாங்கள் செய்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கா என்று எப்பொழுதும் யோசிக்க பழகிக் கொள்ள வேண்டும். அவர்களின் ஒரு சிறிய தவறால் அவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் எத்தனை பெற பாதிக்கப்படுகின்றார்கள்..?? இந்த திரைப்படம் எல்லா காதலர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு...!!
சொல்லவேண்டிய விடயத்தை மிகவும் அழகாக, சிறந்த உதாரணம் மூலம் மனதில் பதியும் வண்ணம் சொல்லி இருக்கின்றார்கள்.
நடிகர்கள்: ரகெண்டு மௌலி, அசோக்குமார், சுபாஷினி
ஒளிப்பதிவு: வசந்த்
எடிட்டிங்: ராஜேஷ்
உதவி இயக்குனர்: பிரவீன் & பி.முரளிதரன்
இணை இயக்குனர்: மணிகண்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: பி முரளிதரன்
மொத்தத்தில் ஈசல் ஊசலாடும் இரு உயிர்
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு குறுந் திரைப்படத்துடன் மினி சினிமாவில் சந்திக்கின்றேன்..!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக