வணக்கம் உறவுகளே வாரா வாரம் உங்களை மினி சினிமா பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு அழகான தமிழ் குறுந் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...!
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் "ஆசை". மளிகை கடையொன்றில் வேலை செய்யும் சிறுவனின் ஒரு "ஆசை". கண்களில் தொலைப்பேசி பட்டாலே, அவனுக்கு திருநல்வேலியில் இருக்கும் தன் அம்மாவுடன் தொலைப்பேசியில் எப்படியாவது கதைக்க வேண்டும் என்று ஒரு அவா...
அதுக்காக எப்படி காசு சேர்க்கவேண்டும், எத்தனை ரூபா அதற்கு செலவாகும் என்று STD பூத்தில் பணியாற்றும் பெண் கூறுகின்றாள்.. இறுதியில் பேசவேண்டும் என்ற கனாவில், தனக்கு கிடைக்கும் சிறு பணமெல்லாம் ஒரு டப்பாவில் சேர்க்கின்றான்... சேர்த்து 5 நிமிடம் பேசுவதுக்கு முயற்சிக்கின்றான். இறுதியில் அந்த சிறுவன் தன் அன்புத தாய்க்கு பேசினானா...?? இல்லையா..?? ஏன்...?? என்பது தன் படத்தின் உச்சப்பட்சக்காட்சி...!
அழகான ஒரு பாசப் பிணைப்பையும், ஒரு இளம் சிறுவனின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிக்கின்றது இந்த குறுந் திரைப்படம்.
இயக்கம் : சாம்
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு மினி சினிமாவில் சந்திக்கின்றேன்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக