சனி, 3 செப்டம்பர், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் மினி சினிமா பகுதியினுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந்திரைப்படம் சித்திரப் பாவை.


ஒரு மன நலம் குன்றிய பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறுந் திரைப்படம் இது. இரட்டை சகோதரிகள் அதில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கபட்ட பெண்ணை, மற்றைய சகோதரி கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றாள்.

வழமை போல வேலைக்கு சென்று விட்டு தனது மனநலம் குன்றிய சகோதரியை பார்க்க வருகின்றாள். அன்று வழமைக்கு மாறாக அதிகமாகவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றாள். வந்த சகோதரி அறைக்குள் சென்று தனது தங்கையுடன் பேசுகின்றாள். புறக்கணித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அந்த விடுதியின் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று சித்திரம் வரைந்து கொண்டிருக்கின்றாள்.

தனது சகோதரியை அன்போடு கீழே வருமாறு அழைக்கின்றாள். மறுக்கின்ற நிலையில் எதிர்பாரா விதமாக துரதிஷ்டமான சம்பவமொன்று நிகழ்கின்றது. இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. மனதை நெருட வைக்கும் அழகான பாசப் பிணைப்பு கொண்டமைந்த குறுந் திரைப்படம். திரைப்படத்தை பார்க்க இங்கு அழுத்தவும்

இயக்கம் : சரத் ஜோதி
இசை : தயானந்த் பிரசாத்
எடிட்டிங் : பிரேம் குமார்

நீங்களும் தவறாது இப்படத்தை பாருங்கள்.... மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்...!!

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்...
பகிர்வுக்கு நன்றி...

Unknown சொன்னது…

//# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
சூப்பர்...
பகிர்வுக்கு நன்றி...//

நன்றி தோழரே.... உங்களின் வாழ்த்துக்கும் கருத்திடுகைக்கும்... தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்...! அவை தரமான ஆக்கங்கள் உருவாக வழிவகுக்கும்...!! :-)

கருத்துரையிடுக