வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இவ்வாரமும் ஒரு அழகான, இனிமையான பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கின்றேன்.. இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் "சங்கீத மேகம்...."

பாடல் வரி....

"சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
என்றும் விழாவே.. என் வாழ்விலே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....

போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே..
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா....
போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே..
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா...

இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்..
இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்..
கேளாய் பூ மனமே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....

உள்ளம் என்னும் ஊரிலே.. பாடல் என்னும் தேரிலே..
நாளும் கனவுகள் ராஜ பவனியில் போகின்றதே...
உள்ளம் என்னும் ஊரிலே.. பாடல் என்னும் தேரிலே..
நாளும் கனவுகள் ராஜ பவனியில் போகின்றதே....

எந்தன் மூச்சும்.. இந்த பாட்டும்.. அணையா விளக்கே..
எந்தன் மூச்சும்.. இந்த பாட்டும்.. அணையா விளக்கே..
கேளாய் பூ மனமே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
என்றும் விழாவே.. என் வாழ்விலே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்...."


1985 ஆம் ஆண்டு k.ரங்கராஜ் இயக்கத்தில், (மைக்)மோகன், ரேவதி, செந்தில், கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில், மாஸ்ட்ரோ இசைக்கலைஞர் இசைஞானி இளையராஜாவின் மனதை வருடும் தெவிட்டாத இசையில், பாடும் நிலா s.p பாலசுப்ரமணியத்தின் குரலில் "உதய கீதம்" திரைப்படத்துக்காக வெளிவந்த அற்புதமான பாடல்..


இத்திரைப்படத்தில் வெளிவந்த ஏனைய பாடல்களும் சூப்பர்ஹிட். நிச்சயம் உங்கள் மனதில், நெஞ்சில் நின்ற ராகங்களில் இப்பாடலும் ஒன்றாக இருக்கும்.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன்...!!

2 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய பாடல்த் தெரிவு .மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் வெல்ல .
பின்தொடர்வோர் தொகுதியில் என்னையும்
இணைத்துக்கொள்கின்றேன். நீங்களும் விரும்பினால்
என் தளத்தில் இணைந்துகொண்டு என் ஆக்கங்களையும்
பார்த்து மகிழுங்கள்.

Unknown சொன்னது…

//அம்பாளடியாள் சொன்னது…
அழகிய பாடல்த் தெரிவு .மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள் வெல்ல .
பின்தொடர்வோர் தொகுதியில் என்னையும்
இணைத்துக்கொள்கின்றேன். நீங்களும் விரும்பினால்
என் தளத்தில் இணைந்துகொண்டு என் ஆக்கங்களையும்
பார்த்து மகிழுங்கள்.//

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும்...!! நிச்சயமாக உங்கள் வலைப்பூக்களுக்கும் சமூகமளிக்கின்றேன்...!

கருத்துரையிடுக