வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே... வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இந்த வாரம் நெஞ்சில் நின்ற ராகத்தில் பகிர்ந்து கொள்ளும் பாடல் "அம்மம்மா தம்பி என்று நம்பி..."


பாடல் வரி...

"அம்மம்மா
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தாள்..
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..

"கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு"

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே..
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே..
அது நாடகமா…. இது நாடகமா…
அது நாடகமா…. இது நாடகமா…
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே..
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..

"தங்கை என்னும் இளைய கன்று..
தாய் வீடு வந்ததென்று..
என்னுடைய நாடகத்தில் காட்சி..
அவள் கொண்டவனை பிரிந்து வந்து..
கோலம் கொண்டு நிற்பதனை..
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி"

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது..
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது..
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ..
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..."



அழகான கருத்துக்கள் பொதிந்த அற்புதமான பாடல்.... சிவாஜி கணேஷன்,ஸ்ரீ காந்த், உஷா நந்தினி, M.N. நம்பியார், V.K ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம். ஒரு தாய் போல கண்ணும் கருத்துமாக வளர்த்த தம்பியை எண்ணி, பாசத்துடன் ஒரு அண்ணன் பாடும் பாடல்.... வீட்டின் நிலையையும், தங்கையின் நிலையையும் பாடலூடாக, அண்ணன் வெளிப்படுத்துகின்றார். சிவாஜியின் நடிப்பு ஒரு உண்மையுள்ள அண்ணனின் பாசத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது.



திரைப்படம்: ராஜபார்ட் ரங்கதுரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வருடம்: 1973

அழகான கூட்டணியில் (விஸ்வநாதன்,கண்ணதாசன்,சௌந்தரராஜன்,சிவாஜி கணேஷன்) அமைந்த திரைப்படம். நிச்சயம் உங்கள் மனதையும் இப்பாடல் உருக வைத்திருக்கும். மீண்டும் அடுத்தவாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்....!!

சனி, 17 செப்டம்பர், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே வாரா வாரம் உங்களை மினி சினிமா பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு அழகான தமிழ் குறுந் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...!

இந்த வாரம் உங்களுடன் மினி சினிமா பகுதியூடாக பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் "தேய் மச்சி தேய்"


எல்லோரும் ஆசைப்படுவது நானும் பணக்காரன் ஆகணும், அவனை போல கை நிறைய காச வீசி வீசி செலவழிக்கனும், எல்லோர் முன்னிலையில் என்னையும் மதிக்கனும், அங்க, இங்க எல்லா இடமும் போகணும் எண்டு கனவு காணுவாங்க...


இருந்தாலும் அவங்க எடுக்கிற சம்பளமோ காணாது. இதே போல தான் இந்த திரைப்படத்தின் ஹீரோ கூட, அளவுக்கு மிஞ்சி ஆசைப் படுகின்றார். எனக்கும் நிறைய காசு வேணும் என்று கோயிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகின்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஏமாற்றுப் பேர்வழி, அவனிடம் வந்து, ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றார்.


அதில் மயங்கிய நமது ஹீரோ தனது வரவுக்கு மிஞ்சிய அளவில் கடனட்டை மூலம் செலவு செய்கின்றார். மாத இறுதியில் செலவுக்கான பற்றுச் சீட்டு வருகின்றது. அப்போது தான் தன் நிலை உணர்கின்றார். அதன்பின் நடப்பது என்ன..??? பலருக்கு நல்ல பாடம் புகட்டும் ஒரு படம்...


கடனட்டை மூலம் வரப்போகின்ற பின் விளைவும், ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருப்பதுக்கும், எம்மை நாமே கட்டுப்படுத்தவும் மிகச் சிறந்த உதாரணம் இந்த குறுந்திரைப்படம்.


இந்த குறுந் திரைப்படத்தை பார்த்த பின் பலருக்கும் தங்கள் நினைவுகள் கண் முன்வரக்கூடும். காரணம் நீங்களும் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

எழுத்து மற்றும் இயக்கம் : N.ராஜேஷ்குமார்
நடிகர்கள் : கர்ணா, ஜிதேந்தர், N.சதீஷ், சில்பி, ப்றேப்னா
இணை இயக்குனர் : S.குரு
உதவி ஒளிப்பதிவு : GK விஷ்ணு
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: N.S.ராஜேஷ்குமார்

மொத்தத்தில் "தேய் மச்சி தேய்" அளவுடன் தேய்....

மீண்டும் அடுத்த வாரம் மினி சினிமா பகுதியூடாக மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்..!! வாசிக்க வந்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...!!

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக மனது மறக்காத இனிய இடைக்கால பாடல்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய சூப்பர் ஹிட்டான இடைக்கால பாடலுடன் சந்திக்க காத்திருக்கின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்.. காதல் காயங்களே....!


பாடல் வரி...!

"காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே...
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே...
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது...
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...

வானம் அது ஒன்று தான் வானில் நிலவொன்று தான்..
காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்று தான்..
வானம் அது ஒன்று தான் வானில் நிலவொன்று தான்..
காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்று தான்..

தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்...
தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்...
உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா...
காதலின் வேதனை என்றும் தீராதடா....

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...

பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது...
உண்மை தெரியாத மனித உன் மனம் ஏங்குது...
பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது...
உண்மை தெரியாத மனித உன் மனம் ஏங்குது...

உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை..
நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை..
நீயும் வாழும் பொது வாழ வேண்டும் வழியா இல்லை...
இன்னும் நீ ஊதடா பாட்டில் ஸ்ருதியே இல்லை...
இன்னும் நீ ஊதடா பாட்டில் ஸ்ருதியே இல்லை...

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே...
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே...
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது...
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே...

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...!!"


திரைப்படம் : ஆண்களை நம்பாதே
பாடல் : காதல் காயங்களே
பாடகர் : K.J. யேசுதாஸ்
இசை : தேவேந்திரன்
வருடம் :1987


அழகான வரிகளைக்கொண்டமைந்த, காதல் சோகப் பாடல்.. பல தத்துவங்களை பாடல் வரிகள் சொல்கின்றது. என்று கேட்டாலும் மனதை விட்டு அகலாத பாடல்களில் இதுவும் ஒன்று. பல ஆண்களின் தேசிய கீதமாகவும் இப்பாடல், இன்றும் ஓங்கி ஒலிக்கின்றது எனலாம். இந்த திரைப்படத்தில் (மறைந்த நடிகர்) பாண்டியன், ரேகா, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்..!!

மீண்டும் அடுத்தவாரமும் மற்றுமொரு இனிய நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ஓராண்டை கடந்து நிக்கும் முரளியின் நினைவு...

தமிழ்த் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத நடிகர்கள் ஒரு சிலரே... அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் முரளி. இப்படியான ஒரு சிறந்த நடிகருக்கு அவர் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஒரு பதிவு கட்டாயம் போடவேண்டும் என்பது என்று நீண்ட நாட்களாக நினைத்த வண்ணம் இருந்தேன். ஆயினும் வேலைப்பளு காரணமாக கடந்த 8 ஆந் திகதி பதிவிட எண்ணியிருந்த பதிவை இன்று பதிவிடுகின்றேன்.. நேரம் தாழ்த்தி பதிவிடுவதுக்கு மன்னிக்கவும்.


தனது எளிமையான, இயல்பான நடிப்பினால் எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்தவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. காரணம் அவரை இந்தக்காலத்து இளசுகளுக்கும் பிடிக்கக் கூடிய ஒரு தமிழ் நடிகர் என்று மார் தட்டிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த நடிகரை இந்த தமிழ் திரை உலகம் இன்று இழந்து ஓராண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.

கடந்த வருடம் (2010) இதே செப்டம்பர் மாதம் 8 ஆந் திகதி மாரடைப்பால் இறைபதம் அடைந்தார். இந்த ஓராண்டுகள் எவ்வாறு சென்றதே என்று தெரியவில்லை... ஆனாலும் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களையோ, அல்லது பாடல்களையோ எப்பொழுது பார்த்தாலும் அவர் மறைந்த செய்தி கண்முன்னே வந்து நிக்கின்றது. இனிமேல் இவர் நடிக்கப்போவதில்லையே என்று..!!


1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தில் ஆரம்பித்து 2010 - கவசம் திரைப்படம் வரை ஏறக்குறைய 100 திரைப்படங்களில் நடித்துள்ளார். பகல் நிலவு, இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க,வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்து வந்தார்.
கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தன் நடிப்பை மட்டுமல்லாது, அந்த கதாப்பாத்திரங்களுக்கு உயிரோட்டமும் வழங்கியதோடு ரசிகர் உள்ளங்களிலும் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். 30 வருட காலத்தில் அவர் தமிழ் சினிமாவுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரின் நடிப்பை வெளிச்சம் போட்டுக்காட்டிய படங்களில் கனவே கலையாதே, மனுநீதி, ரத்னா, காமராசு போன்றவற்றைக் குறிப்படலாம். மேலும் ஆனந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், காதலுடன், காதலே நிம்மதி போன்றவையும் குறிப்பிட்டுக் கூற முடியும். இவ்வாறன எளிமையான, ஆக்க்ஷன், நகைச்சுவை, சென்டிமென்டான, ரசிகர் நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய பாத்திரங்களில் நடித்து அசத்தியவர். அன்றைய அதே இளமையான தோற்றத்துடன் இன்றுவரை வாழ்ந்தவர்.

அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்பட பட்டியல் வருமாறு...
  1. பூவிலங்கு
  2. பகல் நிலவு (மணிரத்னம் இயக்கம்)
  3. தங்கமணி ரங்கமணி
  4. பொற்காலம் (சேரன் இயக்கம்)
  5. புது வசந்தம் (விக்ரமன் இயக்கம்)
  6. பாலம்
  7. வெற்றி மலை
  8. புதியவன்
  9. சிலம்பு
  10. நானும் இந்த ஊருதான்
  11. நாங்கள் புதியவர்கள்
  12. சிறையில் சில ராகங்கள்
  13. புதிய காற்று
  14. நம்ம ஊரு பூவாத்தா
  15. சாமி போட்ட முடிச்சு
  16. இதயம்
  17. குறும்புக்காரன்
  18. தங்க மனசுக்காரன்
  19. சின்ன பசங்க நாங்க
  20. தங்கராசு
  21. என்றும் அன்புடன்
  22. தாலி கட்டிய ராசா
  23. மணிக்குயில்
  24. தங்க கிளி
  25. மஞ்சு விரட்டு
  26. அதர்மம்
  27. என் ஆசை மச்சான்
  28. சத்யவான்
  29. ஆகாய பூக்கள்
  30. தொண்டன்
  31. ‌பொம்மை
  32. காலமெல்லாம் காதல் வாழ்க
  33. ‌போர்க்களம்
  34. ரோஜா மலரே
  35. காதலே நிம்மதி
  36. தினந்தோறும்
  37. வீர தாலாட்டு
  38. ரத்னா
  39. பூந்தோட்டம்
  40. என் ஆசை ராசாவே (சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒரே படம்)
  41. உன்னுடன்
  42. தேசிய கீதம் (சேரன் இயக்கம்.)
  43. பூவாசம்
  44. கனவே கலையாதே
  45. ஊட்டி
  46. இரணியன்
  47. வெற்றி ‌கொடி கட்டு (சேரன் இயக்கம்.)
  48. மனு நீதி (சுமார்)
  49. கண்ணுக்கு கண்ணாக
  50. சொன்னால்தான் காதலா
  51. ஆனந்தம் (லிங்குசாமி இயக்கம்)
  52. சமுத்திரம்
  53. அள்ளித் தந்த வானம்
  54. கடல் பூக்கள் (மாநில அளவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. பாரதிராஜா இயக்கம்.)
  55. சுந்தரா டிராவல்ஸ்
  56. காமராசு
  57. நம்ம வீட்டு கல்யாணம்
  58. காதலுடன்
  59. அறிவுமணி
  60. பேசா கிளிகள்
  61. எங்க ராசி நல்ல ராசி
  62. நீ உன்னை அறிந்தால்
  63. பாணா காத்தாடி (கடைசி படம், இதிலும் மாணவன்தான்; மகன் அதர்வா ஹீரோ)
  64. வண்ணக் கனவுகள் (1987)
  65. கீதாஞ்சலி (1985)
  66. பூமணி
முரளி நடித்து நான் பார்த்த திரைப்படங்களில் மனதை தொட்டுச் சென்ற திரைப்படப் பாடல்கள் சில வருமாறு....

கனவே கலையாதே திரைப்படப் பாடல்...

பூசு மஞ்சள்.. ஹரிஹரனின் குரலில்...

கனவே கலையாதே திரைப்படப் பாடல்...

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்...

காதலே நிம்மதி திரைப்பட பாடல்...

வித விதமா சோப்பு சீப்பு...

மனுநீதி திரைப்பட பாடல்..

ஒரு ரோஜாக்கூட்டம் பூத்து....

இதயம் திரைப்பட பாடல்...

இதயமே என் இதயமே....

பொற்காலம் திரைப்பட பாடல்...

தஞ்சாவூர் மண்ணெடுத்து...

வெற்றிக்கொடிக்கட்டு திரைப்பட பாடல்...

கறுப்பு தான் எனக்கு..

காமராசு திரைப்பட பாடல்...

ஆலயங்கள் தேவை இல்லை....

காமராசு திரைப்பட பாடல்...

பாதி நிலா இன்று பௌர்ணமி...

இறுதியாக அவர் தன் மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் வந்து சென்றார். பார்க்கலாம் அதர்வா தன் தந்தையின் இடத்தை நிரப்புகின்றாரா என்று... !!


இந்த ஓராண்டு மட்டுமல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் கடந்து சென்றாலும் முரளியின் நடிப்பும் அவர் நினைவுகளும் தமிழ் திரையுலக ரசிகர் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிக்கும்..

சனி, 10 செப்டம்பர், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே வாரா வாரம் உங்களை மினி சினிமா பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு அழகான தமிழ் குறுந் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...!


இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் "ஆசை". மளிகை கடையொன்றில் வேலை செய்யும் சிறுவனின் ஒரு "ஆசை". கண்களில் தொலைப்பேசி பட்டாலே, அவனுக்கு திருநல்வேலியில் இருக்கும் தன் அம்மாவுடன் தொலைப்பேசியில் எப்படியாவது கதைக்க வேண்டும் என்று ஒரு அவா...


அதுக்காக எப்படி காசு சேர்க்கவேண்டும், எத்தனை ரூபா அதற்கு செலவாகும் என்று STD பூத்தில் பணியாற்றும் பெண் கூறுகின்றாள்.. இறுதியில் பேசவேண்டும் என்ற கனாவில், தனக்கு கிடைக்கும் சிறு பணமெல்லாம் ஒரு டப்பாவில் சேர்க்கின்றான்... சேர்த்து 5 நிமிடம் பேசுவதுக்கு முயற்சிக்கின்றான். இறுதியில் அந்த சிறுவன் தன் அன்புத தாய்க்கு பேசினானா...?? இல்லையா..?? ஏன்...?? என்பது தன் படத்தின் உச்சப்பட்சக்காட்சி...!


அழகான ஒரு பாசப் பிணைப்பையும், ஒரு இளம் சிறுவனின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிக்கின்றது இந்த குறுந் திரைப்படம்.

இயக்கம் : சாம்

சிறந்த குறும்படம் :- இந்திய திரைப்பட விழா 2010, மெல்போர்ன் - ஆஸ்திரேலியா

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு மினி சினிமாவில் சந்திக்கின்றேன்...

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

குணச்சித்திர நடிகை காந்திமதி மரணம்

பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் (புற்று நோய் காரணமாக) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

2000 ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதன் பின்னர் தேறினார்.

பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தொலைகாட்சி தொடர்களில் மாத்திரம் நடித்து வந்தார். காந்திமதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சென்னை வடபழனியில் வசித்து வந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார்.நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடித்து அசத்தியவர் காந்திமதி.

கரகாட்டக்காரன் படத்திலும் இவரது வேடம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார்.


காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இவ்வாரமும் ஒரு அழகான, இனிமையான பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கின்றேன்.. இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல் "சங்கீத மேகம்...."

பாடல் வரி....

"சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
என்றும் விழாவே.. என் வாழ்விலே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....

போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே..
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா....
போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே..
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா...

இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்..
இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்..
கேளாய் பூ மனமே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....

உள்ளம் என்னும் ஊரிலே.. பாடல் என்னும் தேரிலே..
நாளும் கனவுகள் ராஜ பவனியில் போகின்றதே...
உள்ளம் என்னும் ஊரிலே.. பாடல் என்னும் தேரிலே..
நாளும் கனவுகள் ராஜ பவனியில் போகின்றதே....

எந்தன் மூச்சும்.. இந்த பாட்டும்.. அணையா விளக்கே..
எந்தன் மூச்சும்.. இந்த பாட்டும்.. அணையா விளக்கே..
கேளாய் பூ மனமே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
நாளை என் கீதமே... எங்கும் உலாவுமே....
என்றும் விழாவே.. என் வாழ்விலே...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்...."


1985 ஆம் ஆண்டு k.ரங்கராஜ் இயக்கத்தில், (மைக்)மோகன், ரேவதி, செந்தில், கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில், மாஸ்ட்ரோ இசைக்கலைஞர் இசைஞானி இளையராஜாவின் மனதை வருடும் தெவிட்டாத இசையில், பாடும் நிலா s.p பாலசுப்ரமணியத்தின் குரலில் "உதய கீதம்" திரைப்படத்துக்காக வெளிவந்த அற்புதமான பாடல்..


இத்திரைப்படத்தில் வெளிவந்த ஏனைய பாடல்களும் சூப்பர்ஹிட். நிச்சயம் உங்கள் மனதில், நெஞ்சில் நின்ற ராகங்களில் இப்பாடலும் ஒன்றாக இருக்கும்.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன்...!!

சனி, 3 செப்டம்பர், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் மினி சினிமா பகுதியினுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந்திரைப்படம் சித்திரப் பாவை.


ஒரு மன நலம் குன்றிய பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறுந் திரைப்படம் இது. இரட்டை சகோதரிகள் அதில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கபட்ட பெண்ணை, மற்றைய சகோதரி கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றாள்.

வழமை போல வேலைக்கு சென்று விட்டு தனது மனநலம் குன்றிய சகோதரியை பார்க்க வருகின்றாள். அன்று வழமைக்கு மாறாக அதிகமாகவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றாள். வந்த சகோதரி அறைக்குள் சென்று தனது தங்கையுடன் பேசுகின்றாள். புறக்கணித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அந்த விடுதியின் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று சித்திரம் வரைந்து கொண்டிருக்கின்றாள்.

தனது சகோதரியை அன்போடு கீழே வருமாறு அழைக்கின்றாள். மறுக்கின்ற நிலையில் எதிர்பாரா விதமாக துரதிஷ்டமான சம்பவமொன்று நிகழ்கின்றது. இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. மனதை நெருட வைக்கும் அழகான பாசப் பிணைப்பு கொண்டமைந்த குறுந் திரைப்படம். திரைப்படத்தை பார்க்க இங்கு அழுத்தவும்

இயக்கம் : சரத் ஜோதி
இசை : தயானந்த் பிரசாத்
எடிட்டிங் : பிரேம் குமார்

நீங்களும் தவறாது இப்படத்தை பாருங்கள்.... மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்...!!

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..! இந்த வாரமும் மனது மறக்காத இனிய இடைக்காலப் பாடலொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நெஞ்சில் நின்ற ராகம்.. "ஒருகூட்டுக் கிளியாக..."

பாடல் வரி...

"ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு

ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு

செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் ஈதி பாராமல் வெள்ளம் வரலாம்.
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்,
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா??
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா..??
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக் கோடி கட்டுங்கள்.
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள்.

பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை.

ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு..."


1985 ஆம் ஆண்டு, ராஜசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த, படிக்காதவன் திரைப்படத்துக்காக, இசைஞானி இளையராஜாவின் இசையில், வைரமுத்துவின் வைர வரிகளில், மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்....


மனதை வருடும் இசைஞானியின் இசையும், வைரமுத்துவின் கவி வரிகளும், மலேசியா வாசுதேவனின் குரலும் பாடலுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது எனலாம். ரஜினிகாந்த், அம்பிகா, சிவாஜிகணேசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு கூட இப்பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை.

மீண்டும் அடுத்தவாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

புதன், 31 ஆகஸ்ட், 2011

அப்படி+பாக்கல+சும்மா

அப்படி இப்படி

ஒரு ஊர்ல அப்படி இப்படின்னு ரெண்டு பேர். ஒருநாள் அப்படி எப்படி இருக்கீங்கனார்... இப்படி, எப்படியோ இருக்கேன்னார்.. அப்படி, இப்படி சொன்னா எப்படி, அப்படி இருக்கேன் இல்லை இப்படி இருக்கேனு சொல்லுங்கனாறு. உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்..

நான் எப்படி இருந்தா உனக்கென்னான்னு கேட்டார். அதுக்கு அப்படி, அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு சமாதான படுத்தினார். அப்படியும் இப்படியும் எப்படியோ பிரன்ஸ் ஆனாங்க. நீங்க எப்படி இருக்கீங்க..??

பாக்கல & கேக்கல

ஒரு கத சொல்லவா..??
ஒரு ஊர்ல 2 பிரண்ட்ஸ். பெயர் "பாக்கல & கேக்கல " 1day பாக்கல கூப்பிட்டது கேக்கலைக்கு கேக்கல. So பாக்கலைக்கு சொன்னிச்சா பாக்கலையா..?? then கேக்கல say ஏன் பாக்கலேன்னு ?பாக்கலேகிட்ட! அத கேக்கலைக்கு கேக்கவே இல்லை. அப்புறம் பாக்கல சொன்னதா ஏன் கேக்கலன்னு கேக்கலகிட்ட.. பாக்கல upset ல அத கேக்கல.Totally பாக்கல கேக்கல. கேக்கல பாக்கல!!! R U OK? Cool. இப்போ நான் எண்ட கதைய எப்படி இருக்குன்னு நான் உங்ககிட்ட கேக்கல.. எப்பூடி?


சும்மா சும்மா

சும்மா இருகிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவங்களுக்கு சும்மா சும்மா SMS அனுப்பினா சும்மா இருக்குறவங்க சும்மா சும்மா SMS படிச்சுட்டு சும்மா இல்லாம அதை சும்மா நாலு பேருக்கு அனுப்புவாங்க. சும்மா சொல்றேன்னு இப்போ நீங்க சும்மா இருந்துடாதீங்க.

சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மசெஜை Forward பண்ணுங்க. இல்லேனா சும்மா இருங்க. சும்மா தான் சொன்னேன்... அதுக்கு போய் இப்படி சும்மா கோபப்பட்டா எப்படி...?? எனக்காக சும்மா சிரிச்சதுக்கு thanks. சும்மா போரடிச்சுது. அதுதான் இப்படி சும்மா ஒரு பதிவு... ஓகே யா...??

சனி, 20 ஆகஸ்ட், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக தமிழ் குறுந் திரைப் படங்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் திரைப்படம் நண்பா.

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் உள்ள நட்பை வெளிப்படுத்தும் படம். சந்தீப் மற்றும் சந்தோஷ் பரீட்சையில் அதிக புள்ளி எடுத்த சந்தோஷ்க்கு ஆசிரியர் சாக்லெட் கொடுக்கின்றார்.அருகில் இருக்கும் சந்தீப்கும் கொடுத்துண்ணுமாறு கூறுகின்றார்.


அந்த நேரம் சபதம் கொள்கின்றான் சந்தீப். அடுத்த பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று...இந்த இரு மாணவர்களில், அடுத்த பாடசாலை பரீட்சையில் அதிக புள்ளி யார் எடுக்கிறார்...?? என்பதுதான் படத்தின் சுருக்கம்.
அழகான நட்பை வெளிப்படுத்தும் திரைப்படம். நீங்களும் தவறாது பாருங்கள்.... சிறுவர்களுக்கு பயன்னுள்ள ஒரு திரைப்படம்...


எழுத்தாளர் மற்றும் இயக்குனர் - ரோஹின் V
தயாரிப்பாளர் - L V பிரசாத் திரைப்பட அகடமி
ஒளிப்பதிவாளர் - இவாணி சசி வதனா
ஆசிரியர் - பிரசன்னா ஜி கே
ஒலி - ஹரே கிருஷ்ணா மஹாத்தோ
இசை மேற்பார்வையாளர் - சமந் நாக்
ஆடை - கணேஷ் கார்த்திக்

நடிகர்கள்
சந்தீப் - கவுரவ்
சந்தோஷ் - ராஜ் மோகன்

இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது. அது தொடர்பான விபரம் வருமாறு..

- Won two gold medals for Best Editing and Sound design respectively at L.V.Prasad Film and TV Academy, Chennai,2008
- Won the third prize for the best short fiction in the film fest organized by Ashvita art gallery, Chennai, 2008
- Won the second prize for the best short film in the film fest organized by St.Teresa's College, Ernakulam, 2008
- Won the Best editing award Bimbam film fest organized by Hindhusthan College, Coimbatore, 2008
- Won a special category award for Best Acting in the International Short Film Festival organized by Don Bosco Institute of Communication and Arts, Chennai, 2009
- Won the best editing award at the short film festival conducted by Radio Maja, Chennai, 2009
- Official selection and the only Indian film to participate in the International section at the Sehsuechte International short film competition, Potsdam, Germany, 2009
- Official selection the 9th International student Film festival, MSSF 09, Pisek, Czech republic, 2009
- Won the 'Council General' prize for the best short film at the Court Metrage - 20th International student short film festival of Cergy--Pontoise by TYO Ensea, France, 2010

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு மினி சினிமாவில் சந்திக்கின்றேன்...!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய மனது மறக்காத இடைக்கால பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல். "செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா..."

பாடல் வரி...

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா...
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ...

ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...


வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....

மின்னலை தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...


இந்தப் பாடல் 1988 ஆம் ஆண்டு செந்தூரப் பூவே என்னும் திரைப்படத்துக்காக P.R. தேவராஜ் இயக்கத்தில், விஜயகாந்த், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.. இந்த திரைப்படத்துக்கு மனோஜ் கயன் இசையமைத்துள்ளார்.
இந்த அழகான பாடலுக்கு குரல் கொடுத்திருக்கின்றார்கள் s.p பாலசுப்ரமணியம், சசிரேகா ஆகியோர். இந்த திரைப்படத்தை இயக்கியதுக்காக P.R. தேவராஜுக்கு தமிழ் நாட்டின் சிறந்த இயக்குனருக்கான விருதும் அத்துடன் இந்த திரைப்படத்தில் நடித்ததுக்காக விஜயகாந்துக்கு தமிழ் நாட்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அற்புதமான புட் சிற்பங்கள்.. (ஆங்கிலப் பதிவு)

பொதுவாகவே நாம் பார்த்து வியக்கும் சிற்பங்களில் இதுவும் ஒன்று... அது தான் இந்த புல் சிற்பங்கள்... கண்ணைக்கவரும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்...

Here are 10 amazing sculptures made only of grass! Quite intricately sculpted, must see sculptures! Includes sculptures from elephants to giraffes to even unicorns!


Cool and creative Formula 1 car grass figure

Cow grass sculpture

This is an amazing elephant grass sculpture.

Giraffe grass sculpture found in Krasnoyarsk, Siberia during summer time.

In the grounds of a country house in Cornwall near the fishing village of Mevagissy the Victorian gardens have been restored to their former glory

Men grass sculpture at Museum Beelden aan Zee in Scheveningen by Wim Quist architects.

The sculpture, In the Garden of Dreams, was made by brother and sister team Sue and Pete Hill.This sculpture was created as a sister to the Mud Maid which can be found at the Lost Gardens of Heligan in Cornwall.

If you have ever visited an art gallery and felt assailed by the "don't touch" signs, then Lucy Strachan's work is for you. Her outdoor sculptures cry out to be touched - or even stroked and hugged, something the artist herself encourages. “Spinning Top” was Lucy's first grass work.

Unicorns United.

சனி, 13 ஆகஸ்ட், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே....!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக தமிழ் குறுந் திரைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் பசி.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மையே... என்று மீண்டும் இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.
இத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன், யுத்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறுகின்றது. ஒரு பாடசாலை செல்லும் சிறுவனை மையமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


பசிக்கு உணவாக தண்ணீரை அருந்தி விட்டு பாடசாலை செல்கின்றான். பாடசாலையில் வைத்து பசி உயிரைப் பறிக்கின்றது. அருகில் வந்து அமர்ந்து, சாப்பாடு பெட்டியை திறந்து சோற்று பருக்கையில், கழன்ற ஒற்றையை ஒட்டுகின்றார் வாத்தியார். அந்த நேரத்தில் யுத்த விமானம் பறந்து வருகின்றது, எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். ஆங்காங்கே சிதறி அடித்து சென்று பங்கருக்குள் ஒழிந்து கொள்கின்றனர். ஆனால் ஒருசிறுவன் மட்டும் மீண்டும் ஓடி வருகின்றான். வந்தவன் போகாமல் என்ன செய்கின்றான்..???? எதற்க்காக வந்தான்..?? இதுதான் படத்தின் கதை....

ஆழமான கதைக்கருவுடன் அமைந்த அற்புதமான ஒரு சிறந்த குறுந் திரைப்படம். நீங்களும் தவறாது ஒருமுறை பாருங்கள்...

திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு :- செ. தே இமய வர்மன்
கதை :- தாமரை செல்வி
படத்தொகுப்பு :- சரண்ராஜ்
சிறுவன் :- கிருஷ்ண ராஜ்

மீண்டும் அடுத்த வாரமும் மினி சினிமா பகுதியூடாக ஒரு சிறந்த தமிழ் குறுந் திரைப்படத்துடன் உங்களை சந்திக்கின்றேன்...!!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே..!! வார வாரம் மனதை விட்டு நீங்காத இனிய இடைக்காலப் பாடல்களை "நெஞ்சில் நின்ற ராகம்" பகுதியூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி...!

இந்த வாரமும் உங்களுக்காக இனிய இடைக்காலப் பாடல் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்... "அந்தி நேர தென்றல் காற்று..."


"இணைந்த கைகள்" திரைப்படத்துக்காக இடம்பெற்றது.


பாடல் வரி....

"அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு ...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...

தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..

அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...

உயிர் கொடுத்த தந்தை இங்கே..
உரு கொடுத்த அன்னை அங்கே..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே..
தாலாட்ட அன்னை உண்டு...
சீராட்ட தந்தை உண்டு..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ள நண்பன் உண்டு..
ஒரு தாயின் பிள்ளை போல..
உருவான சொந்தம் கொண்டு..
வரும் காலம் யாவும் வெல்ல..
இணைந்த கைகள் என்றும் உண்டு...

அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...

ஆராரோ ஆரிராரிராரோ...
ஆராரோ ஆரிராரிராரோ...

உன் மகனை தோளில் கொண்டு..
உரிமையோடு பாடுவதென்று..
அந்நாளில் துணையாய் நின்று..
பங்குக் கொள்ள நானும் உண்டு..
தத்துப் பிள்ளை இவனை கண்டேன்..
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்..
பத்து திங்கள் முடிந்த பின்னே..
முத்து பிள்ளை அவனை காண்பேன்..
உறங்காத கண்ணில் இன்று..
ஒளி வந்து சேரக் கண்டேன்..
பரிவான நண்பன் தந்த..
கனிவான தோள்கள் கண்டேன்..

அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..

அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...!!"


அழகான மனதை வருடும் கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.

1990 ஆம் ஆண்டு,ஆபாவாணனின் வரிகளில், N.K விஸ்வநாதனின் இயக்கத்தில், அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா, சசிகலா, செந்தில் மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம்.இசையமைத்துள்ளார் மனோஜ் கயான்..?? இளையராஜா என்றும் ஒரு தகவல் கூறுகின்றது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன்...! வாசிக்க வந்த அணைத்து அன்பான உள்ளங்களுக்கும் நன்றிகள்....!!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி... எண்டதுமே பலருக்கு தேவாவின் பாடல் நினைவுக்கு வந்திருக்கும்.. நான் அதைப்பற்றி சொல்ல வர வில்லை. மாறாக கண்ணுக்கு இடும் லென்ஸ் வகைகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். சோ... சோப்பும் இல்ல சீப்பும் இல்ல... ஒன்லி கண்ணாடி.... ஓகே..


Mickey Mouse contact lens.

The Dior Eyes - designer branding!

Sports Lenses to reduce glare from the sun.

Cat Eye.

Extra Sparkle!








எப்பூடி இருக்கு..?? இப்பொழுது அதிகமாக இளைஞர்கள் யுவதிகள் எல்லோரும் இந்த கண்+ணாடி லென்ஸ் பாவிக்கும் மோகத்தில் இறங்கிவிட்டார்கள். ஆகவே அவர்களுக்கு இந்த பதிவு மூலம் புதிய லென்ஸ் வகைகளை அறிந்து கொள்ளக்கூடியாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்..