ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இதனைப் பயன்படுத்தி கூகுள் டாக்ஸ்(Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில் புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது.
மைக்ரோசாப்ட் பதிலுக்கு இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
கிளவுட் கம்ப்யூட்டிங் இயக்க முறையில் ஆபீஸ் 365, டெஸ்க்டொப் கம்ப்யூட்டிங் வசதிகளை மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது.
நிறுவனம் ஒன்றின் வேலையை அதில் பணியாற்றுபவர் உலகின் எந்த மூலையிலிருந்தும் செயல்படுத்தலாம். இதனால் இவற்றை நிறுவ ஒரு நிறுவனம் செலவழிக்கும் மூலதனச் செலவு குறைகிறது. ஒரு பயனாளர் மாதம் ஒன்றுக்கு இரண்டு டொலர் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் வசதிகளுக்கேற்ப கட்டணம் அதிகரிக்கும்.
ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் இரண்டுமே இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களாகும். கூகுள் டாக்ஸ் இணையத்திலேயே முழுக்க இயங்குகிறது. ஆபீஸ் 365 இயக்க உங்கள் கணணியில் எம்.எஸ். ஆபீஸ்(ஆபீஸ் 2010 உகந்தது) இருந்தால் நல்லது. இல்லாமலும் இயக்கலாம்.
இணைய வழி தயாரித்த கோப்புக்களை கணணியில் ஓப்லைனில் இயக்கிப் பார்க்க எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு கணணியில் இருப்பது அவசியம். ஆபீஸ் 365ல் இணைபவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்து ஆபீஸ் தொகுப்பு ஒன்றைத் தங்கள் கணணியில் வைத்துக் கொள்வார்கள். ஆபீஸ் 365 உரிமக் கட்டணத்திலேயே எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையும் இயக்கலாம்.
நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மற்றும் ஷேர் பாய்ண்ட் ஆகியவற்றை இயக்கி அதனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டு வருபவர்கள் கவலையை விடுத்து ஆபீஸ் 365 இயக்கத்தில் இணையலாம். எந்தக் கவலையும் இன்றி எக்சேஞ்ச், ஷேர் பாய்ண்ட் மற்றும் ஓர் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
எந்த இணைய பிரவுசரிலும் இந்த இரண்டும் செயல்படும். இருப்பினும் ஆபீஸ் 365 இன்டர்நெட் எக்ஸ்புளோர ரிலும், கூகுள் டாக்ஸ் குரோம் பிரவுசரிலும் முழுமையான விளைவினைத் தருகின்றன.
இதில் கூகுள் டாக்ஸ் ஒரு படி மேலாகச் சென்று கூகுள் டாக்ஸ் பக்கத்தில் மஞ்சள் நிற டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் டாக்ஸ் தரும் அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யாது என்று கூறுகிறது.
ஆபீஸ் 365 இயக்கத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஓடியோ - வீடியோ கான்பரன்ஸ், இணைய வெளி ஒயிட் போர்டிங் வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிடைப்பதால் கூடுதல் வசதியுடன் இருப்பது தெரிகிறது.
ஆனால் செலுத்த வேண்டிய கட்டணத்தில் மைக்ரோசாப்ட் எங்கோ செல்கிறது. கூகுள் ஓர் அலுவலகத்தின் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் கேட்கிறது. எடுத்துக்காட்டாக உங்கள் நிறுவன சர்வரில் கூகுளுக்குக் கட்டணம் செலுத்தி எத்தனை மின்னஞ்சல் அக்கவுண்ட் வேண்டுமென்றாலும் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொன்றுக்கும் 25 ஜி.பி இடம் தரப்படுகிறது. போன் தொடர்பு வசதியும் கிடைக்கிறது. மற்ற வசதிகளான கூகுள் டாக்ஸ் கொண்டுள்ள வேர்ட் ப்ராசசிங், ஸ்ப்ரெட்ஷீட், ஸ்லைட் ஷாஸ், பார்ம்ஸ், டேட்டா ஸ்டோரேஜ், ஜிமெயில், காலண்டர், ஸ்பேம் பில்டர் என நாம் பயன்படுத்தி வரும் அனைத்தும் இலவசமே. இந்த வகையில் கூகுள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஆபீஸ் 365 மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முறையற்றது. இரண்டின் அடிப்படையும் அதன் வழியில் கிடைக்கும் வசதிகளும் வெவ்வேறு கட்டமைப்பு கொண்டவையே.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக