சனி, 2 ஜூலை, 2011

மினி சினிமா

மினி சினிமா பகுதியில் முதன் முறையாக பதிவிடும் குறுந் திரைப்படம் விஸ்கொம்

இந்த விஸ்கொம் குறும் படமானது பல இளைஞர்களின் கனவுகளையும் அவர்கள் தான் வாழ்க்கையில் எப்படி வர வேண்டும், எதை சாதிக்க ஆசைப்படுகின்றார்கள், அதற்காக அவர்கள் தனி ஒருவனாக இருந்து செய்யும் முயற்சிகளை எடுத்துக் காட்டுகின்றது.

படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு திரைப்பட இயக்குனராக வர வேண்டும் என்ற கனவுடன் துடிக்கும் சிறுவன், அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளும், அதில் அவன் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் எடுத்துக்காட்டப்படுகின்றது. இறுதியில் அவன் சாதித்தானா..?? இல்லை சாகடிக்கப் பட்டனா...??? என்பது தான் கதை...! இந்த காலப்பகுதியில் அவன் குடும்பமும், நண்பர்களாலும் நையப்புடைக்கப்படுவதும், மனதாலும் உடலாலும் படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை...!

எந்தவொரு ஆர்ப்பாட்டமின்றி அழகாக சாதாரண கேமரா ஒன்றினால் இயல்பாக எடுக்கப்பட்டிருகின்றது..!


இயக்குனர், ஆசிரியர், தொழில்நுட்ப, திரைக்கதை,திரைக்கதை எழுத்தாளர், விஷூவல் எஃபெக்ட்ஸ்,தயாரிப்பாளர் மற்றும் மேம்படுத்துநர்: தினேஷ் குமார்

நடிகர்கள்: எஸ் விஷால், சி ஆர்த்தி, சந்திரா ஹசீதா ரெட்டி, ஆர் அமித், சி. நளினி, தினேஷ் குமார்

இடம்: முழுமையாக சேலையூரில் உள்ள ஒரு இடத்தில்

கேமரா: DCR-DVD610E (சோனி)

நேரம்: 26 நிமிடங்கள் 19 வினாடிகள்

தனிப்படுத்திக்காட்டு: இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் படத்தின் ஹைலைட் ஒன்று.

கருப்பொருள்: இந்த படம் இந்தியாவில் ஒரு Bsc.Visual தொடர்புமாணவர் போராட்டம் சித்தரிக்கிறது.

பிரிவு: வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை கதை

வெளியிடப்பட்ட ஆண்டு: 2010

மொத்தத்தில் விஸ்கொம் பார்க்கலாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக