இந்த வாரம் மினி சினிமா பகுதியூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் குறுந்திரைப்படம் ஆடு புலி ஆட்டம் பலியாவது யார்...??? ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கின்ற கதையே இது.

தன் மனைவி குழந்தை பிரசவிப்பதுக்காக வைத்தியசாலைக்கு செல்கிறார் கணவன். என்ன குழந்தை பிறக்க போகின்றது என்ற எதிர்பார்ப்புடன் தனது முதல் பிள்ளையுடன் ஒப்ரேஷன் தியட்டருக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.. மனதில் ஆயிரம் கனவுகளின் ஓட்டங்கள் நிழல்களாக கண் முன்னே வந்து செல்கிறது. இந்நிலையில் தாதி வந்து சொல்லுகிறார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று...!
ஆடிப் போகின்றார்...!
அங்கு பிரசவத்திற்காக வந்த மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணின் தாய் சொல்லும் வார்த்தைகள் அவர் நெஞ்சில் ஈட்டியாய் குத்துகின்றது.
வழமையாக வைத்தியரிடமும், வக்கீல்களிடமும் சொல்லும் டயலாக் "எவ்வளவு செலவானாலும் பரவா இல்லை ஒரு ஆண் குழந்தை வேணும்" இங்கு இவரும் சொல்லுகின்றார். இறுதியில் என்ன நடந்தது தான் கதை... ஆண் பிள்ளை தான் வேணும் என்பவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இன்னும் கொஞ்சம் கதையில் அழுத்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு..!
நடிப்பிலே அசத்தியிருக்கிறார் தலை வாசல் விஜய் என்றே கூற வேண்டும்..!
படத்தொகுப்பு -: ஆண்டனி ரூபன்
ஒளிப்பதிவு -: சதீஷ்
இசை -: கணேஷ் ராகவேந்திரா
திரைக்கதை, கதை, இயக்கம் -: சாம்யேல் மேத்யூ
மொத்தத்தில் தரமான ஆட்டம்
படத்தொகுப்பு -: ஆண்டனி ரூபன்
ஒளிப்பதிவு -: சதீஷ்
இசை -: கணேஷ் ராகவேந்திரா
திரைக்கதை, கதை, இயக்கம் -: சாம்யேல் மேத்யூ
மொத்தத்தில் தரமான ஆட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக