வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக குறுந்திரைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன்.. அந்த வகையில் இன்றும் ஒரு குறுந்திரைப்படம் பற்றி உங்களுடன் பகிந்து கொள்ளப் போகின்றேன்.
இன்று உங்களுடன் பகிந்து கொள்ளும் குறுந்திரைப்படம் கானல் நீர். உலகில் பிறக்கும் எல்லா காதலும் இம்மண்ணில் ஜெயிப்பதில்லை.. ஜெயிக்கும் எல்லா காதலும் நிலைப்பதில்லை..! இந்த கானல் நீர் படமானது ஒரு காதல் காவியத்தையே புரட்டிப் பார்க்க வைக்கின்றது.

வீட்டில் தன் தந்தையை கட்டாயப்படுத்தி காதலனை கரம் பிடிக்கலாம் என்று முயன்றாள் சந்தியா. விவேக்கும் வீட்ட வந்து பேச மறுக்க, இறுதியில் தந்தை பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்கிறாள். கல்யாணம் வரைக்கும் வந்து இறுதியில் சந்தியா தன்னால் மனதை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று கல்யாணத்தை நிறுத்திவிட்டு, இரண்டு வருடம் இங்கிலாந்து சென்று படித்து விட்டு வருகிறாள்.
மீண்டும் தன் காதலனான விவேக் காத்திருப்பன் என்ற நம்பிக்கையில் அவனை தேடி வருகின்றாள். வந்த அவளுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கின்றது. அது என்ன..?? எதற்காக விவேக் தன் கனவுகளையும் இலட்சியங்களையும் கைவிட்டு இந்த முடிவுக்கு வந்தான்..??? அதன் பின் நடப்பது என்ன..??? என்பது தான் இக்குறுந்திரைப்படத்தின் கதை.. அழகான காதல் கதை.
இரு நபர்களுக்கு இடையில் நடைபெறும் சம்பாஷனையாகவே படம் செல்கின்றது. வேறு கதா பாத்திரங்கள் கண்ணிலே காட்டப் படவில்லை.. அத்துடன் ஒரே இடத்தில் (வீட்டின் வரவேற்ப்பறை)யை மட்டுமே கமெரா சுத்தி சுத்தி படம் பிடித்துள்ளது. இவை கூட இப்படத்திற்கு வலுவிழக்கச் செய்கின்றது எனலாம். அத்துடன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இயக்கம்: ரம்யா ஆனந்தே கலிங்கராயர்
ஒளிப்பதிவு: சாய் குமார்
இசை: பிரிடோ
நடிகர்கள்: (விவேக்) ஆதித் அருண்
(சந்தியா) ரெஜினா செசட்ரா
இசை: பிரிடோ
நடிகர்கள்: (விவேக்) ஆதித் அருண்
(சந்தியா) ரெஜினா செசட்ரா
நிச்சயம் இப்படம் பலரின் மனதை நெருட வைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை..!
கானல் நீர் மொத்தத்தில் காதலின் விம்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக