அந்த வகையில் இவ்வாரம் பல பாடல்கள் என் மனதில் வந்து அலை மோதின.. இருந்தாலும் எந்தப்பாடலை தேர்வு செய்வது என்று ஒரு குழப்பம்.. இறுதியில் இந்தப்பாடலை தேர்வு செய்தேன்..! இந்தப் பாடலை தேர்வு செய்யக்காரணம்
1. இப்பாடலில் வரும் அழகான வரிகள்..
2. இப்பாடலின் இசையும் கேட்டவுடனேயே மனதில் ஒட்டிகொண்டமையே ஆகும்.

"அம்மன் கோவில் தேரழகு.. ஆயிரத்தில் ஓரழகு.. நாணமுள்ள கண்ணழகு... நான் விரும்பும் பெண்ணழகு...
என்னுடைய கற்பனையில் வந்து நிக்கும் வண்ண மயில்..."
ஒரு பெண்ணை எப்படி வர்ணிக்க முடியுமோ அப்படி வர்ணித்திருக்கிறார்கள்... ஆபாசமின்றி அப்பெண்ணின் உருவத்தை அழகாக பாடலில் சொல்லியிருக்கின்றார்கள்.. அவளை இவ்வுலகில் எப்பொருட்களோடு ஒப்படி முடியுமோ, அப்படியான பொருட்களோடு ஒப்பிட்டிருக்கின்றார்கள்..!

"நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர்தான் என முகம்தான் கொண்ட பெண்பாவைதான்....
மேல் வானிலே தோன்றும் மூன்றாம் பிறை.. புருவம் என அமையும் இளங் பூங்கோதை தான்..
இடை தான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட... நடை தான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட... கெண்டை மீனும் வண்ண மானும் கண்ணிரெண்டில் கூடாதோ..."

"மீனாட்சி தான் காஞ்சி காமாச்சி தான்... மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம் தான்...
தென்னாடு தான் பேசும் பண்பாடு தான்.. காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடு தான்..

அவள்தான் என்னோடுதான் பூமாலைதான் சூட.... அடடா எங்கே அந்த பெண்தான் என்று தேட....
என்னை தேடி.. சிந்து பாடி.. சொப்பனத்தில் வந்தாளே....!!"
கேட்கும் போது மீண்டுமொரு முறை கேட்கத்தூண்டும் பாடல்...!
சங்கர்கணேஷின் இதம் தரும் இசையில், வயதானாலும் இளமையாய் கவி வரிகளை எழுதும் வாலியின் வரிகளில் S.P.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்...

1989 ஆம் ஆண்டு வெளிவந்த சொந்தம்16 திரைப் படத்துக்காக இடம் பெற்ற பாடல் இது. இத்திரைப் படத்தில் மோகன், அறிமுகம் "கல்யாணி", சந்திரசேகர், மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர். மோகன் தான் மனதில் தோன்றும் அந்த கனவு நாயகியை வர்ணிக்கையில் அந்த வர்ணிப்புக்கு உருவமும் உயிரும் கொடுக்கின்ற வகையில் சந்திரசேகர் வரைவதாய் பாடல் காட்சி அமைந்துள்ளது...!!
மீண்டும் அடுத்தவாரம் இன்னுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தின் வழியாக சந்திக்கின்றேன். நாளைய தினம் மினி சினிமா பகுதியூடாக மிகச்சிறந்த சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லுகின்ற தமிழ் குறுந் திரைப்படமொரு உங்களுக்காக வர இருக்கின்றதென்பதையும் நினைவு படுத்திக்கொள்கிறேன். வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக