வெள்ளி, 22 ஜூலை, 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக அழகான தமிழ் குறுந்திரைப்படங்களை உங்களுடன் பகிந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந்திரைப்படம் என் மேல் விழுந்த மழை துளி.



காதல் என்றால் என்ன என்று கேட்டால் "கல்" மாதிரி என்று சொல்லுகின்றான் ஒரு சிறுவன். காரணம் அப்படிப்பட்ட நிலையில் இருக்கு இன்றைய காதல்கள். வாழ்கையில் எல்லா காதலும் ஜெயிப்பதில்லை.. அதே போல் எல்லா காதலும் தோற்பதில்லை... எத்தனை காதல் உண்மையாய் இருக்கின்றது...?? காதல் என்னும் பெயரில் நடத்தப்படும் களியாட்டங்களும், சில கருமாந்தரங்களும் கண்ணெதிரே ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது. காதல் தோல்விகளுக்கு அவர்களுக்கிடையில் நம்பிக்கையின்மை, சந்தேகம் காரணமாக சொல்லலாம். ஆனால் காதலர்கள் தோற்பதுக்கு யார் காரணம்..??


அழகான காதல் கதையை சொல்லுகின்றது இந்த என்மேல் விழுந்த மழைத் துளி. வழமை போலவே இரு காதலர்கள் காதலிக்கின்றார்கள். அன்று அவள் ஆசையாக வாங்கிக்கொடுத்த சாவிக்கோர்வை, அதுவே அவன் வாழ்கையின் அஸ்தமனத்திற்கும் காரணமாகின்றது.

ஒரு கட்டத்தில் அந்த பெண், வீட்டில் சொல்கிறாள்.. தந்தை கடும் கோபங் கொள்கிறார். அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத பெண் உயிரை விடுகின்றாள். தன் காதலியின் இறப்பு செய்தியை கேட்டு காதலன் பெண் வீட்டை நோக்கி விரைகிறான். இருந்தும் இறுதியாக அவள் முகத்தை வீட்டில் மாலையிட்டு வைத்த படத்திலே காண்கிறான்.

வந்தவன் தான், தன் பெண்ணின் இறப்புக்கு காரணம் என்று அப்பெண்ணின் தந்தையும் சக உறவினர்களும் தங்கள் கோபம் தணியும் வரை சரமாரியாகத் தாக்குகின்றனர். இறுதியில் ஒரு குப்பை போல வீதியில் அவனை வீசுகின்றனர். உடலாலும், உள்ளத்தாலும் ஊனமுற்ற அவன், இறுதியில் என்ன முடிவுக்கு வருகின்றான் என்பது தான் கதை.

பகுதி 01

பகுதி 02


மனதை உருக்கும் வகையில் அமைந்த அழகான காதல் கதை எனலாம். உண்மைக்காதல் இதுவன்றோ..!!
கதை, திரைக்கதை, வசனம், பாடல், பின்னணி இசை எல்லாம் பிரம்மாதமாக அமைந்துள்ளது எனலாம்.

இயக்கம், படத்தொகுப்பு : N.S ராஜேஷ் குமார்
எடிட்டிங் : ராஜ்
இசை : நந்தா
நடிகர்கள் : அருள், அஷ்யானா தோமஸ், நாகராஜ், வினோத்
பாடகர் : அஷ்யானா தோமஸ்

என் மேல் விழுந்த மழை துளி உங்கள் மனதில் விழுந்த உயிர் துளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக