வணக்கம் உறவுகளே.. வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக உங்களுடன் தமிழ் குறுந் திரைப்படமொன்றை பகிர்ந்து கொள்ளுவது வழமை. அந்த வகையில் இவ்வாரமும் ஒரு சிறந்த குறுந் திரைப்படமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் திரைப்படம் முகப்புத்தகம்.
இன்றைய காலத்தில் வேகமாக சுழலும் உலகில் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக முகப்புத்தகம் அல்லது பேஸ் புக் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த சமூக நட்புறவுத் தளங்கள் கடல் கடந்து இருக்கும் எமது சொந்தங்களையும், நண்பர்களையும் தேடிப்பிடிப்பதுக்கும், அப்படி கண்டுகொண்ட சொந்தங்களுடன் இலகுவாக பேசுவதுக்கும் கருத்துக்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வதுக்கும் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று அதையும் தாண்டி, எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றனர். இளம் சமூகத்தினர் மாத்திரமின்றி வயதானோரும் இப்பொழுது இதில் தங்களை மறந்து வீணாக பொழுதுகளை போக்க ஆரம்பித்துள்ளனர். அரட்டை, விளையாட்டுக்கள் என்று ஒரு சாராரும், இன்னொரு தொகுதியினர் நண்பர்கள் என்று பழகி காதல், பிரிவு, பழிவாங்கல், என்று சென்று கொண்டிருக்கின்றது. பல இளம் சமூகத்தினர் காதல், ஏமாற்றம், மன உளைச்சல், இந்தன் காரணமாக தற்கொலை முயற்சி, இன்னும் என்னென்ன தவறான செயல்கள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த முகப்புத்தகம் திரைப்படம் கூட நமது இளம் சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லும் படமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சாட்டிங்கில் ஆரம்பித்து, பின் தொலைபேசியூடாக பேசி, காதல் வயப்பட்டு பின், நேரில் பார்க்க அழைக்கிறாள் அந்தப் பெண்... அப்பொழுது தான் தெரிகின்றது அது பெண் குரலில் பேசி கொள்ளையடிக்கும் கொலைக்காரக் கும்பல் என்று.. இதே போலவே சுகந்திர பறவை போல் சுற்றி திரியும் நான்கு இளைஞர்களில் ஒருவன் இதே போன்ற சம்பவமொன்றில் சிக்கிக் கொள்கிறான். வந்த அந்த தொலைபேசி நபர் யார்..?? இறுதியில் என்ன நடக்கின்றது என்பது தான் படத்தின் கதை..
அழகாக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது இத் திரைப்படம். காதல் என்ற பெயரில் முகமே அறியாது பலர் தங்கள் மனதுகளைப் பறிகொடுக்கின்றனர். பின் நேரில் பார்கின்ற பொழுது, தங்கள் கனவில்,கற்பனையில் ரசித்த நபர் எதிர்பார்ப்பதைப் போன்று இல்லாதவிடத்து, கனவுகளும் கற்பனைகளும் மணலில் கட்டிய மணல் வீடாய் கரைந்து போகின்றது.
எழுத்து மற்றும் இயக்கம்-அட்லி
ஒளிப்பதிவாளர் - ஜோர்ஜ் கேட்ச் வில்லியம்ஸ்
இசை-நந்தா
ஒளிப்பதிவாளர் - ஜோர்ஜ் கேட்ச் வில்லியம்ஸ்
இசை-நந்தா
பாடல்- நவீன்
ஆசிரியர்-T.S.சுரேஷ்
எழுத்தாளர்கள் - சூர்யா பாலகுமாரன் & ப்ரியாமதன்
ஆசிரியர்-T.S.சுரேஷ்
எழுத்தாளர்கள் - சூர்யா பாலகுமாரன் & ப்ரியாமதன்
எனவே இந்த திரைப்படம் எல்லாருக்கும் நல்லதொரு செய்தியைக் கூறும் படமாக அமைந்துள்ளது. இக்குறுந் திரைப்படத்தில் வரும் பாடல் பின்னணி இசை எல்லாமே அருமை. இறுதியில் அழுத்தமான செண்டிமெண்ட் கொண்டமைந்த கதை. முகப்புத்தம் மூலமாக வரும் நன்மைகளையும், தீமைகளையும் குறுகிய நேரத்தில் சொல்லி முடித்துள்ளார்கள்.
முகப்புத்தகம் பல நூறு மக்களின் முக விம்பங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக