வெள்ளி, 1 ஜூலை, 2011

நெஞ்சில் நின்ற ராகமும் மினி சினிமாவும்

நெஞ்சில் நின்ற ராகமும் மினி சினிமாவும் என்ற தலைப்பை பார்த்ததும் ஏதும் நிகழ்ச்சி பற்றிய விமர்சனமோ இல்லை, சினிமா பற்றிய பதிவோ என்று நினைத்திருக்கக் கூடும்.

உண்மை தான்... ஆனாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது.

நீண்ட நாட்களாக என்மனதில் இருந்த எண்ணம் இது. வெறுமனவே ஆரம்பித்து விட்டு இடை நிறுத்தக் கூடாது என்ற நோக்கிலேயும் அது பற்றிய மேலதிக தகவல்களையும் திரட்டும் நோக்கிலேயும் நீண்ட யோசனைக்கு பின் இதனை ஆரம்பிக்க முயற்சித்தேன்.



முதலாவது நெஞ்சில் நின்ற ராகம்...

இதன் மூலமாக மனது மறக்காத, கேட்பதற்கு அரிய, தத்துவம்மிக்க 80,90 களில் வெளிவந்த இனிய இடைக்காலப் பாடல்களை பகிர்ந்துக் கொள்ள காத்திருக்கிறேன்.
90 களின் பின்னர் வந்த மனதை நெருட வைத்த பாடல்களும் இடம் பெற வாய்ப்புண்டு. அது அப்பாடலின் தரத்தை பொறுத்தே அமைய இருக்கின்றது. நிச்சயம் அது உங்கள் மனதை வருடும் ஒரு பகுதியாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.



அடுத்து....

இரண்டாவதாக மினி சினிமா...
அண்மைக்காலமாக பல குறுந் திரைப்படங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. நம்நாடு கலைஞர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியா, மலேஷியா, கனடா என்று தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் இவ்வாறு குறுந் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.


அவை வெள்ளித்திரை போல் அல்லாது குறுகிய நேரத்தில் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை மிகக் கச்சிதமாக எடுத்துக் காட்டுகின்றது. சொல்ல வேண்டிய விடயத்தை அதிரடி, ஆர்ப்பாட்டமின்றி சொல்லுகின்றது. சில நேரத்தில் இப்படியான கதையம்சம் கொண்ட படங்கள், ஏன் வெள்ளித்திரையாக வரக்கூடாது...?? இல்லை வந்திருக்கக் கூடாது...?? என்று எண்ணத் தோணுகின்றது.
அப்படிப்பட்ட தரமான குறுந்திரைப் படங்கள் பற்றியும் அதைப் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதே இந்த மினி சினிமாவின் நோக்கமாகும். இப்பதிவுகளை வாரா வாரம் ஒரு குறுந் திரைப்படமும் ஒரு பாடலும் பதிவிட எண்ணியுள்ளேன்.

வெள்ளிக் கிழமைகளில் இடைக்கால பாடலும் சனிக் கிழமைகளில் குறுந்திரைப்படத்தையும் பதிவிடவுள்ளேன். அத்துடன் வழமையான சமகால நிகழ்வுகள் எல்லாம் அவ்வப்போது பதிவிடுவேன். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களும் என்னுடைய முயற்சிக்கு பயனுடையதாக அமையலாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக