மறு பிறவி என்பது உண்மையா இல்லை பொய்யா என்று பலருக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது. எனினும் மறுபிறவி என்பது ஒரு கற்பனை. இவ்வாறு கூறுகின்றது விஞ்ஞானம். ஆனால் மெஞ்ஞானம் மறு பிறவி என்பது உண்மை என்கிறது.
மெஞ்ஞானத்தின் படி பார்த்தால் மதங்கள் அதை சார்ந்த கருத்துக்களும், இந்த மறுபிறவிகள் இருக்கின்றது அல்லது அவை உண்மை என்கிறது. இது மனிதர்கள் தங்களைத் தானே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், ஒழுக்கங்களை கடைப்பிடிக்கவும் மதங்களின் பேரிலும் அதனூடு சார்ந்த கருத்துக்களாலும் கட்டுப்படுத்தி இல்லை பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் எனலாம்.
விஞ்ஞானத்தின் படி பார்த்தால் ஒரு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றல்/உயிர் மீண்டும் ஒருவகையில் மாற்றமடைகின்றது. இல்லை மீள் சுழற்சியாகின்றது எனலாம்.
உதாரணத்துக்கு "மழை" ஐ எடுத்துக்கொள்வோம். அது மலையில் இருந்து விழும் போது நீர்வீழ்ச்சி. அதுவே ஓரிடத்தில் தேங்கி நின்றால் குளம், குட்டை, ஆறு என்கிறோம். இறுதியில் அது கடலுக்குள் சென்றால் கடல் என்கிறோம். குடிக்க பயன் படுத்தினால் அது குடிநீர். மொத்தத்தில் இந்த மழை எத்தனை வடிவம் பெற்றுள்ளது என்று பாருங்கள். இவ்வாறே மனிதனில் இருக்கும் உயிரை/ஆற்றலை/ஆன்மாவை அழிக்க முடியாது. அது மீண்டும் ஏதோ ஒருவகையில் மரமோ, இல்லை ஏதோ ஒரு விலங்காகவோ மாறுகின்றது எனலாம்.
சரி இனி விஷயத்துக்கு வருவோம். அண்மையில் ஒரு பத்திரிகையில் மறு பிறவி பற்றி படித்த செய்தியே இந்த பதிவை எழுதத் தூண்டியது. மண்ணுலகம் மட்டுமன்றி விண்ணுலகமும் போற்றும் ஒரே பெண் என்றால் அது கல்பனா சாவ்லா. யாவரும் அறிந்த விண்வெளி வீராங்கனை. சில வருடங்களுக்கு முன் (2003) விண்வெளி விபத்தில் தன்னுயிரையே தியாகம் செய்தார்.
அந்த வீராங்கனை மீண்டும் மறு பிறவி எடுத்து இருக்கின்றாராம். உத்தர பிரதேசத்தில் "பாடா" எனும் கிராமத்தில் "உபாசனா" எனும் பெயரில் பிறந்துள்ளாராம். இந்த சிறுமிக்கு 7 வயது ஆகின்றதாம். தான் வந்த விண்ணோடம் வெடித்து நொறுங்கியது பற்றியும், தன் நண்பர்கள் அமெரிக்காவில் இருப்பது பற்றியும் பேசுகின்றாளாம். இது அக்குழந்தையின் படிப்பறிவில்லாத பெற்றோருக்கு நீண்ட நாட்களுக்கு பின் மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வந்துள்ளது.
அந்த செய்தியை விரிவாக வாசிக்க இங்கு அழுத்தவும்.
இது ஒருவேளை உண்மையாக இருந்தால் மீண்டும் நாங்கள் இழந்த சாதனை பெண்ணை பெற்றோம் என்ற மகிழ்ச்சி இவ்வுலகத்தாருக்கு நிச்சயம் உண்டு.
ஆனால் அந்த செய்தியில் இறுதியில் இன்னொரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.
அவதார புருஷராம் சத்திய சாயி பாபாவின் மறுபிறவி பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறதாம். ஐயோ...!! என்று பலர் தலையில் கை வைப்பதும் எனக்கு புரிகிறது. ஒரு பாபாவினால் சுருட்டப்பட்ட கோடிக்கணக்கான பணமும், கிலோ கணக்கிலான தங்கம், வெள்ளி எல்லாம் இப்போது தான் அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கின்ற நிலையில் இன்னொருத்தரா....???? என்று கேள்வி எழுப்பத் தோனுகின்றது.
மறுபிறவியாக கல்பனா வந்தால் நிச்சயம் சந்தோஷம். அதுவே சாய் பாபா வந்தால்........?????
கேள்விக்குறி மட்டுமே மிச்சம்.
எது எப்படியோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக