வெள்ளி, 15 ஜூலை, 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக இனிய இடைக்கால பாடல்களை பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய இடைக்கால பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்று பகிர்ந்து கொள்ளும் பாடல் பாலைவன ரோஜாக்கள் திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் அவரே பாடி அசத்திய பாடல்...

"காதல் என்பது பொது உடமை.. கஷ்டம் மட்டும் தானே தனி உடமை...!!
அப்பனும் ஆத்தாளும் சேராம போனா.. நீயுந் தான் பொறக்க முடியுமா..??
இத எப்போதும் நீயும் தான் மறுக்க முடியுமா..??"


ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு..
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு..
புத்தனும் போன பாதை தான்... பொம்பள என்னும் போதை தான்...
அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது..??
இது நாளும் நாளும் தாகம் தான்..
உண்மைய எண்ணி பாரடா.. இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா...

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்...
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்...
ஒன்னாக கலந்த உறவு தான் எந்நாளும் இன்பம் வரவு தான்...
இது காதல் என்கிற கனவு...
காண என்னுற மனசு.. இத சேர துடிக்கும் வயசு தான்..

வாழ்கையே கொஞ்ச காலம் தான்..
இந்த வாழ்கையில வாலிபம் கொஞ்ச நேரம் தான்...

காதல் என்பது பொது உடமை.. கஷ்டம் மட்டும் தானே தனி உடமை...

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா... நீயுந் தான் பொறக்க முடியுமா..??
இத எப்போதும் நீயும் தான் மறுக்க முடியுமா..??




இப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆழமான கருதுடையதாய் அமைந்துள்ளது.
1986 ஆம் ஆண்டு, இசைஞானி இளையராஜாவின் இசையில் பிரபு, நளினி, ஜனகராஜ், சத்யராஜ், லட்சுமி ஆகியோர் நடிக்க மணிவண்ணன் இயக்கிய படம்..!
இப்பாடலுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார்..

மீண்டும் அடுத்த வாரமும் இன்னுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தோடு சந்திக்கின்றேன்...!

4 கருத்துகள்:

ADMIN சொன்னது…

சும்மா கலக்குறீங்க ராசா..!


ஒவ்வொரு வரியிலும் ஆழமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ள இப்பாடலை யாருக்குத் பிடிக்காது? அதுவும் இசைஞானி இசையமைப்பு என்றால் சும்மாவா?

நல்லதொரு சிந்தனையைத் தூண்டிவிடும் பாடல்.. ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி..!

ADMIN சொன்னது…

பதிவைப் படிங்க.. பிடிச்சிருந்தா, கமென்ட் போடலாம்.. இன்ட்லியில் ஓட்டுக் கூட போடலாம்..!
இணைப்பு; http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

ADMIN சொன்னது…

லோகேசு.. நீ lowcase.. இல்ல high case..!!! சரிதானே.!!

Unknown சொன்னது…

சும்மா கலக்குறீங்க ராசா..!

தங்கம்பழனி சொன்னது…
//ஒவ்வொரு வரியிலும் ஆழமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ள இப்பாடலை யாருக்குத் பிடிக்காது? அதுவும் இசைஞானி இசையமைப்பு என்றால் சும்மாவா?

நல்லதொரு சிந்தனையைத் தூண்டிவிடும் பாடல்.. ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி..!//

இசைஞானி என்றால் சும்மாவா..?? அத்துடன் கங்கை அமரன் வரிகளின் சொந்தக்காரர்... கேக்கவா வேணும்..!

//லோகேசு.. நீ lowcase.. இல்ல high case..!!! சரிதானே.!!//

ஹீ... ஹீ... ரொம்ப புகழுறீங்க... இதுல ஏதும் உள் குத்து இருக்குமோ..??? :P

கருத்துரையிடுக