வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக மனது மறக்காத இனிய இடைக்காலப் பாடல்களை, வெள்ளிக்கிழமை தோறும் பகிர்ந்து வருகின்றேன்.. அந்தவகையில் இவ்வாரமும் ஒரு அருமையான இடைக்காலப் பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பாடல் ஊமை விழிகள் திரைப்படத்துக்காக இடம் பெற்ற "மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...."
இத்திரைப்படம் 1986 ஆண்டு, R. அரவிந்தராஜ் இன் இயக்கத்தில் மனோஜ் கயனின் மனதை வருடும் அற்புதமான இசையமைப்பில் விஜயகாந்த், கார்த்திக், ஜெய்ஷங்கர், சரிதா, அருண்பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் எனலாம்.
பாடல் வரி..
"மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்...
விரைவில் அரங்கேறிடும்...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்...
விரைவில் அரங்கேறிடும்...
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா...
கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது... ஒ...ஒ...
கூடவந்த நாணம் தடுக்குது...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா...
கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது... ஒ...ஒ...
கூடவந்த நாணம் தடுக்குது...
கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...
கூடவந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது....
கூடிவிட மனது துடிக்குது...
கூடவந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது....
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா....
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா....
சித்திர பூவிழி பாரம்மா... சிற்றிடை மெலிந்த தேனம்மா..
பத்து விரல் அணைக்கத் தானம்மா ..ஓ...
முத்து ரதம் எனக்குத் தானம்மா...

பத்து விரல் அணைக்கத்தானம்மா..
முத்து ரதம் எனக்குத்தானம்மா..
பத்து விரல் அணைக்கத்தானம்மா..
முத்து ரதம் எனக்குத்தானம்மா..
உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது...
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது...
மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா...
கண்ணா புது நாடகம்...
விரைவில் அரங்கேரட்டும்ம்.....
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்..
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்...!!

பொதுவாக இத்திரைப்படப் பாடல்களைக் கேட்டால் எல்லாரும் சொல்லுவார்கள் இளையராஜா தான் இசையமைத்துள்ளார் என்று.. ஆனால் உண்மை அதுவல்ல... மனோஜ் கயன் தான் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசைக்கு நிகராக அவருடைய இசையமைப்பு பாணி அமைந்துள்ளது எனலாம். ஆகவே பாடலை கேட்போருக்கு நிச்சயம் இளையராஜா தான் என்று மனது கூறும்.
இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஆபாவாணன். பாடலை பாடியோர் B.S.சசி ரேக்ஹா மற்றும் S.N.சுரேந்தர். பாடகி சசி ரேக்ஹாவின் குரல் சின்னக்குயிலாய் ஒலிக்கின்றது.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்..

2 கருத்துகள்:
:-)
//மருதமூரான். சொன்னது…
:-)//
வருகைக்கும் கருத்திடுகைக்கும் மிக்க நன்றி...!!!
கருத்துரையிடுக