வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக மனது மறக்காத இனிய இடைக்காலப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்தவகையில் இந்த வாரமும் ஒரு அற்புதமான பாடல் உங்களுக்காக கொண்டுவந்த்துள்ளேன்..!
இந்த வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக பகிர்ந்து கொள்ளும் பாடல் "அழகான புள்ளி மானே...."

1987 ஆம் ஆண்டு, இயக்குனர் ராமநாராயணனின் இயக்கத்தில், பிரபு,ரேகா, ரகுவரன், செந்தில், s.s சந்திரனின் நடிப்பில் வெளியான மேகம் கறுத்திருக்கு திரைப்படத்திற்காக இடம்பெற்ற அற்புதமான பாடல்..!
இந்த மனோஜ் கியான் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இசையமைத்துள்ளார். ஊமை விழிகள், உரிமை கீதம், உழவன் மகன், வெளிச்சம், தாய் நாடு போன்ற இன்னும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பாடல் வரி...
"அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
பொண்னுக்கு தாலி எதுக்கு...?? மூன்று முடிச்சு வெகுமானம்... ஓ... ஆறு முடிச்சு அவமானம்....
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
அந்தபுரத்த காவல் காக்க நானும் தான் வந்தேங்க.. என் அர்னா கயிற காவல் காக்க யாரும் இல்லைங்க...
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே... வக்கீலுக்கு பீசு என்ன மானம் தானே.....
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே... வக்கீலுக்கு பீசு என்ன மானம் தானே.....
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
வாழ மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது... நீ தோல பார்த்து மாடு புடிச்சா தொழிலுக்கு ஆகாது...
புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே... தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம் தானே....
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா... நான் கண்ணீராலே கழுவிப்பார்த்தா கறுப்பும் மாறாதா...
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சி வாடும் போது... நாக்குக்குள்ளே புண்ணு வந்தா வார்த்த எது...
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே....
பொண்னுக்கு தாலி எதுக்கு...?? மூன்று முடிச்சு வெகுமானம்... ஓ... ஆறு முடிச்சு அவமானம்....
அழகான புள்ளி மானே.... உனக்காக அழுதேனே...."
ஆழமான கருத்தினையும் கொண்டமைந்த பாடல்... அதிகம் கேட்க கிடைக்காத பாடல்களில் இதுவும் ஒன்று..!
மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!! வருகைக்கு மிக்க நன்றி..!
7 கருத்துகள்:
சூப்பர் பாட்டு...
//# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
சூப்பர் பாட்டு...//
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்...!!!
மிகவும் அருமையானதொரு பாடல்...
nala song nanpa...
//“நிலவின்” ஜனகன் சொன்னது…
மிகவும் அருமையானதொரு பாடல்...//
வருகைக்கும் அத்துடன் கருத்துரை இட்டதுக்கும் மிக்க நன்றி...!!
//அன்பு நண்பன் சொன்னது…
nala song nanpa...//
வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் அத்துடன் கருத்துரை இட்டதுக்கும் மிக்க நன்றி...!!
மிகவும் புழுஅருமையானதொரு பாடல் எனக்கு படித்த வரிகள் புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே... தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம் தானே....
கருத்துரையிடுக