ஆடிவேல் ரதபவனி ஆரம்பித்த வரலாறு
இலங்கை எங்கும் வேலுக்கு அரோஹரா எனப் பண்டுதொட்டு கோஷமிட்டு வழிபடுவது குறிப்பாக ஆடி மாதத்திலேயேயாகும். அரோஹராச் சத்தம் வானைப் பிளக்குமளவுக்கு கோஷமிடப்படுவது பக்திமிகு வேல் வழிப்பாட்டினால் ஆகும். இதற்கான காரணம் ஆடிப் பூரணையோடு வருவது கதிர்காம உற்சவம்.கதிர்காம உற்சவம் நிகழும் காலத்தில் இலங்கையின் நான்கு திசைகளில் வாழும் வேலவனின் அடியார்கள் விரத அனுட்டானத்துடன் கால் நடையாகவே தமது திருத்தல யாத்திரையை மேற்கொண்டனர். பின்னர் புகையிரதம், பேரூந்து, வான் முதலானவற்றில் பிரயாணஞ் செய்து கதிர்காமத்தை அடைந்து வழிப்பட்டனர். அவ்வாறு திருத்தல யாத்திரையின் போது அவர்களால் முருகனை மனதார வாழ்த்தி எழுப்பும் கோஷமே "அரோஹரா" இக் கோஷமானது யாத்திரை மேற்கொள்ளும் சகல கதிர்காமக் கந்தன் அடியார்களாலும் எழுப்பப்படும் 'அரோஹரா' கோஷம் ஆகும்.
வேல் உண்டு. வினை இல்லை என நாம் வேலனை வழிபடுகின்றோம். கதிர்காம வேல், தில்லை மண்டூர் வேல், திருகோணமலை வேல், செல்வச்சந்நிதி வேல், மாவிட்டபுரம் வேல், மலையகத்துவேல், கொழும்பு மாநகர் வேல் என வேலவன் எங்குமே வீற்றுள்ளான். வேல் தனிவேலாக உள்ளது.
அதேபோல ஆறு மூலைகளைக் கொண்ட வேலும் வழிபாட்டில் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. சிவபெருமானின் ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களையும் அதோ முகம் எனப்படும் முகத்தையும், கொண்டதே ஆறு முகங்களை- ஆறு மூலைகளைக் கொண்ட வேலாகும். கிராமம் முதல் தலைநகர் வரை இவ்வாறு வேல் வழிபாடு இருந்து வருகின்றது.
ஆடிமாதத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தோடு வருவது ஆடிவேல் விழா. சம்மாங்கோட்டில் வர்த்தகத்துக்காக வந்த பெருமக்கள் தமது வழிபாட்டிற்காக வேலை வைத்து வணங்கினர். இவர்கள் கதிர்காம உற்சவத்தைத் தர்சிக்க பாத யாத்திரையாக காவடி முன்செல்ல வேலைத் தாங்கி அரோஹரா கோஷமிட்டுக் கதிர்காமஞ் சென்று மாணிக்க கங்கையில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.

பிரித்தானியர் ஆட்சியின் போது நாட்டில் ஏற்பட்ட 'கொலரா' நோயால் கதிர்காம யாத்திரை தடைப்பட்டது. இதன் காரணமாக சம்மாங்கோட்டினரால் முதலாம் குறுக்குத் தெருவில் வேல் வழிபாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக் கோட்டை நகரத்தாரால் செட்டித்தெருவில் வேல் வழிபாட்டு விழா மேற்கொள்ளப்படலாயிற்று. இவ்வாலயங்களில் வேலவனுக்கு வழுவாது விழாக்கள் நடைபெற்றன.
எனவே கதிர்காம உற்சவ காலத்தில் கொழும்பு மாநகரில் வேல்விழா ஆரம்பமாயிற்று. முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வேலவன் காவடி முன்செல்ல மங்கள வாத்தியம் முழங்க நகர் பவனியாக வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீமாணிக்க விநாயகர் ஆலயஞ் சென்று அங்கு தங்கி அருள் பாலித்து நான்காம் நாள் மீண்டும் சம்மாங்கோட்டார் ஆலயத்தை வேலவன் வீதியுலாவாக வந்து சேர்வது வழக்கமாகும்.
அதேபோன்று நாட்டுக் கோட்டை நகரத்தார் செட்டித் தேருவில் இருந்து வேலவனை மங்கள வாத்திய சகிதம் பம்பலப்பிட்டி கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு வீதியுலாவாக - நகர் உலாவாக எடுத்துச் சென்று நான்காம் நாள் மீண்டும் நகர் வலமாக செட்டித்தெரு ஆலயத்துக்கு எளுந்தருளச் செய்தனர். 1902 முதல் வேல், வெள்ளி இரதத்தில் வருவது எண்டு குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.
ஆடிக்கலவரம்
"அன்று தானும் தனது நண்பியும் ஆடிவேல் பார்ப்பதுக்காக செல்லவேண்டுமென்று திட்டமிட்டனாறாம். மாலை மூன்று மணியளவிலே பம்பலப்பிட்டி கோவிலுக்கு தயாராகி விட்டு நண்பியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாராம். ஏழு மணியாகி விட்டது. நண்பி வரவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டிலே இருந்து விட்டார்.
மறுநாள் காலை, வழமை போல் வேலைக்கு சென்றிருக்கின்றார். அப்பொழுது நண்பியிடம் வராததுக்கான காரணத்தை விசாரித்த போது கூறினாராம் நேற்று ஆடிவேல் விழாவில் தமிழ், சிங்கள குழப்பமாம். அதுதான் வரவில்லை என்று. சொல்லி முடிப்பதுக்குள், மட்டக்குளியில் பணிபுரிந்த தொழிற்சாலையில் மேலிடத்தில் இருந்து விஷேட அறிவிப்பு.
கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளதால் எல்லோரும் பாதுகாப்புடன் வீடுகளுக்கு சென்றடையவும் என்று. உடனடியாக அங்கிருந்த தமிழ், சிங்கள ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளார்கள். தமிழ் பெண்கள் தங்கள் நெத்தியில் இருந்த பொட்டை அழித்துக்கொண்டு வெளியேறினார்களாம். எனது தாயாரின் வீடு மட்டக்குளியிலே அமைந்திருந்தமையால் உடனடியாக வீட்டை நோக்கி விரைந்தாராம்.
அதன் பின் நேரம் செல்லச் செல்ல கொழும்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதாம். அக்கம் பக்கம் இருந்த பல தமிழ் வீடுகள்,அடித்து நொறுக்கப்பட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டு அவர்களின் பொருட்கள் எல்லாம் களவாடப்பட்டதாம். வீடுகள் எரித்தும், பழைய முன் விரோதங்கள் எல்லாவற்றையும் தீர்க்கும் முகமாக அவர்களை அடித்தும், துன்புறுத்தியும், தூண்களில் நிறுத்தி கட்டி வைத்து எரித்திருக்கின்றார்கள்.
அந்த நேரத்திலே தனது அண்ணன் கலவரம் நிறைந்த முகத்துடன் வீட்டை நோக்கி விரைகின்றார். அவர் எதிபார்த்தது, தன்குடும்பமும் சின்ன பின்னமாகி இருக்குமே என்ற அச்சத்தில்.... ஆனால் அப்படியேதும் இடம் பெறவில்லை. வந்தவர் மேலும் சொல்கிறார்.
கொழும்பின் மத்திய பிரதேசமான புறக்கோட்டைப் பகுதிகளில் இளைஞர்கள் பலர் மின் கம்பங்களிலே தொங்கிய வண்ணம் எரிந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் கடைகள், வீடுகள் என எல்லாம் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
இவ்வாறே பல உயிர்கள் ஆடிகலவரத்தின் போது பறிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சில நாட்கள்,வாரங்களாக கொழும்பு நகர் கொழுந்து விட்டு எரிந்தது என தெரிவித்தார்.
இந்நிலையில் எனது தந்தை கூறும் போது வெள்ளவத்தை கூட அதே நிலைமை தான் இருந்தது எனவும் வெள்ளவத்தையில் இருக்கும் பிரபலமான எண்ணெய் கடை பல நாட்களாக எரிந்ததாகவும் சொன்னார்.

2 கருத்துகள்:
அருமையான பதிவு...வாழ்த்துக்கள் நண்பரே...
//அருமையான பதிவு...வாழ்த்துக்கள் நண்பரே...//
மிக்க நன்றி தோழரே உங்களின் கருத்திடுகைக்கு....!!
கருத்துரையிடுக